share market today : ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சாதகமான சூழல், உயர்வால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையும் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சாதகமான சூழல், உயர்வால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையும் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
பெடரல் வங்கி
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரி்த்துவருவதால் அந்நாட்டின் பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சீன பொருளாதார வளர்ச்சி
சீனாவின் பொருளாதார வளர்ச்சி மார்ச் மாதம் முடிந்த முதல் காலாண்டில் எதிர்பார்த்த அளவைவிட குறைந்து 4.8 ஆகச் சரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை, பல்வேறு நகரங்கள் லாக்டவுனில் சிக்கியுள்ளன. இதனால் உலக நாடுகளுக்கு தேவையான முக்கிய பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதால், அது மற்ற நாடுகளின் பொருளதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் சீன நிலவரத்தை உற்று நோக்கியுள்ளனர்.
காலாண்டு முடிவுகள்
இந்தியாவில் இன்னும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வரும் நாட்களில் வெளியிடும். அப்போது பங்குச்சந்தை குறியீட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், இந்தியாவில் பணவீக்கம் உயர்வு ஆகியவை நேற்றைய பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாகின. இந்த காரணிகளையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

உயர்வு
ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சாதகமான போக்கால் இன்று காலை இந்திய பங்குச்சந்தையிலும் ஏற்றமான போக்கு காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடக்கத்தில் சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயர்ந்து 57,435 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது.
தேசியப் பங்குச்சந்தையி்ல் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து, 17,266 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது. 1667 பங்குகள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றன, 328 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமலும் உள்ளன.
30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 7 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன, 23 நிறுவனப் பங்குகள் லாபத்தில் செல்கின்றன.

லாபம்
குறிப்பாக பார்திஏர்டெல், டெக்மகிந்திரா, ஹெச்சிஎல்டெக், டாக்டர்ரெட்டீஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் ஆகியபங்குகள் சரிவில் உள்ளன. டாடா ஸ்டீல், பஜாஜ்பின்சர்வ்,என்டிபிசி, பவர்கிரிட், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், நெஸ்ட்லே இந்தியா, கோடக்வங்கி, டிசிஎஸ், ஐடிசி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி,ஆக்சிஸ் உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் செல்கின்றன.
நிப்டியில் தகவல்தொழில்நுட்பத் துறை பங்குகளைத் தவிர அனைத்து துறைகளும் லாபத்தில் செல்கின்றன. குறிப்பாக உலோகம், ஊடகம், ஆட்டமொபைல் துறை பங்குகள் ஒரு சதவீத உயர்வுடன் நகர்கின்றன. பொதுத்துறை வங்கிகள், எப்எம்சிஜி துறைப்பங்குகளும் நல்ல லாபத்தோடு நகர்கின்றன
