Asianet News TamilAsianet News Tamil

Share market today: உக்ரைன் அதிபர் பேச்சால் பங்குச்சந்தையில் மீண்டும் ஊசலாட்டம்

Share market today: 3 நாட்கள் இடைவெளிக்குப்பின் தொடங்கிய மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் காலை ஏற்றத்துடன் வர்தத்கம் தொடங்கினாலும், உக்ரைன் அதிபரின் பேச்சால், மீண்டும் ஊசலாட்டைத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Share market today:  Sensex, Nifty pare gains, turn volatile
Author
Mumbai, First Published Mar 21, 2022, 10:53 AM IST

3 நாட்கள் இடைவெளிக்குப்பின் தொடங்கிய மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் காலை ஏற்றத்துடன் வர்தத்கம் தொடங்கினாலும், உக்ரைன் அதிபரின் பேச்சால், மீண்டும் ஊசலாட்டைத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Share market today:  Sensex, Nifty pare gains, turn volatile

உயர்வு

கடந்த வாரத்தில் வெள்ளிக்கிழமையிலிருந்து பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால், இன்று காலை உற்சாகத்துடன் வர்தத்கத்தைத் தொடங்கியது.கடந்த வாரத்தில் உள்நாட்டுப் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறியதால், ஏற்றத்துடனே முடிந்தது.

நம்பிக்கை

கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது, இந்தியாவில் பணவீக்கம் பெரிதாக அதிகரிக்காதது போன்றவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. 

இதனால்,இன்று காலை முதல் வர்த்தகம் ஏற்றத்துடனே நடந்தது. மும்பை சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்தநிலையில் வர்தத்கம் நடைபெற்றது.

Share market today:  Sensex, Nifty pare gains, turn volatile

உக்ரைன் அதிபர்  பேட்டி

ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில், “ ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும். பேச்சு தோல்வியில் முடிந்தால், நிச்சயம் 3-வது உலகப் போருக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஊசலாட்டம்

இந்த பேச்சு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிந்துவிடும் என நினைத்திருந்த முதலீட்டாளர்களுக்கு உக்ரைன் அதிபர் பேச்சு, அச்சத்தை ஏற்படுத்தியதால், சந்தையில் பங்குகள் ஊசலாட்டத்தை நோக்கி நகர்கின்றன

Share market today:  Sensex, Nifty pare gains, turn volatile

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், 13 பங்குகள் லாபத்திலும் 17 பங்குகள் சரிந்தன. குறிப்பாக மாருதி, இன்போசிஸ், விப்ரோ,டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், டைட்டன், சன்பார்மா, டிசிஎஸ், ஹெச்சிஎல், டாக்டர் ரெட்டீஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்தில் செல்கின்றன.

நிப்டி

மற்ற பங்குகளான, பவர்கிரிட், என்டிபிசி, ஹெச்டிஎப்சி, ஏர்டெல், பஜாஜ்பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனாஸ், இன்டஸ்இன்ட் வங்கி, எஸ்பிஐ, கோடக் மகிந்திரா, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஏசியன்ட் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன

Share market today:  Sensex, Nifty pare gains, turn volatile
நிப்டியில் தகவல்தொழில்நுட்பம், உலோகத்துறை, ஆட்டமொபைல், மருந்துத்துறை ஆகியவை குறிப்பிடத்தக்கத லாபத்தில் செல்கின்றன. வங்கி, நிதிச்சேவை, எப்எம்சிஜி ஆகியதுறைகள் சரிவில் உள்ளன
 

Follow Us:
Download App:
  • android
  • ios