share market today:மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை காலை உற்சாகமாக வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், இன்று பிற்பகலுக்குப்பின் ஏற்ற இறக்கம் காணப்பட்டு முடிவில் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை காலை உற்சாகமாக வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், இன்று பிற்பகலுக்குப்பின் ஏற்ற இறக்கம் காணப்பட்டு முடிவில் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது.
கடந்த 3 நாட்களாக ஏற்றத்துடன் சென்ற பங்குசந்தை இன்று லேசான சரிவுடன் வர்த்தகத்தை முடித்துள்ளது.
நம்பிக்கை
ரஷ்யா உக்ரைன் இடையிலான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தாலும், போர் இனிமேல் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் குறைவு என்ற தகவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5 டாலர் குறைந்தது, அமெரிக்கா தனது இருப்பிலிருந்து கச்சா எண்ணெயை வெளியிட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது போன்ற சர்வதேச காரணிகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தன.

அதுமட்டுமல்லாமல் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கடந்த இரு நாட்களாக அதிகமாக முதலீடு செய்துவருவதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஊசலாட்டம்
ஆனால், ஆசியப்பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தது, இந்தியாவின் பொருளாதார வரும் நிதியாண்டில் குறையும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தீவிரமடையலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மனதில் பிற்பகலில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது.

சரிவு
இதையடுத்து, பிற்பகலில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும்முன்பே மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தன. ஆனால் மாலை வர்த்தகம் முடியும்போது லேசான சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 115புள்ளிகள் குறைந்து, 58,568 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி, 30 புள்ளிகள் சரிந்து, 17,468 புள்ளிகளில் முடிந்தது.
லாபம்-இழப்பு
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 பங்குகளில் 15 பங்குகள் லாபத்திலும் 15 பங்குகல் சரிவிலும் முடிந்தன. பவர்கிரிட், லார்டன் அன்ட் டூப்ரோ, அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர்ஸ் ரெட்டி, கோடக் வங்கி, சன்ஃபார்மா, ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், பஜாஜ்பின்சர்வ், இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன

மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஐடிசி, டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, என்டிபிசி, ஹெச்யுஎல், ஆக்சிஸ் வங்கி, நெஸ்ட்லே,ஏசியன்பெயின்ட்ஸ், டிசிஎஸ், பவர்கிரிட், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் , பார்தி ஏர்டெல், பங்குகள் லாபமடைந்தனநிப்டியில் மருந்துத்துறை, பொதுத்துறை வங்கிகள், ஐடி ஆகியவை சரிவில் முடிந்தன. எப்எம்சிஜி, உலோகம், ஆட்டோமொபைல், எண்ணெய்மற்றும் எரிவாயு ஆகிய பங்குகள் லாபத்ிதல் முடிந்தன
