share market today : மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையி்ல் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு சரிவு இன்று ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள்வரை சரிவதற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையி்ல் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு சரிவு இன்று ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள்வரை சரிவதற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன

அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டிவீதத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்திய உலகளவில் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் சரிந்து 54,587 புள்ளிக்குச் சரிந்து. நிப்டி 342புள்ளிகள் குறைந்து 341 புள்ளிகளாகக் குறைந்தது. கடந்த 2 மாதங்களில் மிகக்குறைவானதாகும்.

உலகளவில் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்துள்ள பணவீகக்ம், பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஆகியவைதான் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் பார்க்கப்படுகிறது என ஜியோஜித் நிதிச் சேவையின் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தையில் பெரிய சரிவு ஏற்படுவதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன

சர்வதேசச் சந்தையில் சரிவு:

அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டிவீதத்தை உயர்த்தியது நாஷ்டாக் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நாஷ்டாக்கில் 2020ம் ஆண்டுக்குப்பின் மோசமான சரிவை நேற்று சந்தித்து 5 % வீழ்ந்தது. தி டோ ஜோன்ஸ் 3.12 சதவீதமும், எஸ்அன்ட்பி 3.56 சதவீதமும் வீழ்ந்தன. அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவு ஆசியச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது

உலகளவில் பணவீக்கம் உயர்வு

கொரோனா காரணாக பொருளாதார வளர்ச்சிக்காக சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதனால் பொருளாதாரம் வளர்ந்த அதேநேரத்தில் பணவீக்கமும் கட்டுக்கடாங்காமல் வளர்ந்தது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்கடங்கா நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்க ப பெடரல் வங்கி கடனுக்கான வட்டியை இருமுறை உயர்த்தியது, பிரிட்டன் தலைமை வங்கியும் வட்டியை உயர்த்த இருக்கிறது, இந்தியாவில் ரிசர்வ் வங்கி வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த பணவீக்கம் அதிகரிப்பு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நுகர்வோர்கள் செலவிடுவதில் சுருக்கம் ஏற்படும், பொருளாதார வளர்ச்சி குறையும் என்று முதலீட்டாளர்கள் அச்சப்படுகிறார்கள்

வட்டிவீதம் உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி 4.40 ஆக அதிகரித்துள்ளது.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடைசி ஆயுதமான நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. இதனால் புதன்கிழமை பங்குச்சந்தை 2 சதவீதம் சரிந்தது. அடுத்துவரும் மாதங்களிலும் வட்டிவீதம் உயர்வு இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். ரொக்கக் கையிருப்பு விகிதம் வங்கிகளுக்கு 50 பிபிஎஸ் உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிக்குள் ரூ.80 ஆயிரம் கோடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொழில்நடத்துவோர் கடன் பெறுவது கடினமாகும், வங்கி நடைமுறை கடினமாகும் என முதலீட்டாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

பங்கு பத்திரங்கள் மதிப்பு உயர்வு

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதால் 10 ஆண்டுகளுக்கான பங்குப் பத்திரங்கள் மதிப்பு 3 சதவீதம் அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குப் பத்திரங்களில் முதலீட்டை திருப்பத் தொடங்கியுள்ளனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்தும்போது வட்டி கிடைக்கும் என்பதால், முதலீடு அங்கு திரும்பும்

உலகச் சூழல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை போன்றவை முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி உலகளவில் பாதிக்கும் என்ற அச்சத்தால் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்