share market today :தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. எல்ஐசி ஐபிஓவில் பொது முதலீட்டாளர்களுக்கான விற்பனை இன்று தொடங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. எல்ஐசி ஐபிஓவில் பொது முதலீட்டாளர்களுக்கான விற்பனை இன்று தொடங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பெடரல் வங்கி

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துவோம் என பெடரல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வாரம்நடக்கும் பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டீவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு, வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களும் இன்று வெளியாகின்றன. இதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் பங்குகள் ஆர்வம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள்.

காலாண்டு முடிவுகள்

இது தவிர அதானி கிரீன், கோடக் மகிந்திரா வங்கி, அதானி டோட்டல் கேஸ், ஹவேல்ஸ் இந்தியா, டாடா கன்சூமர் ப்ரோடெக்ட்ஸ், ஆரக்கிள் நிதிச்சேவை உள்ளி்ட்ட முக்கிய நிறுவனங்களின் கடந்த நிதியாண்டின் மார்ச் மாதம் முடிந்த கடைசி காலாண்டு விற்பனை நிலவரங்கள் வெளியாகின்றன. இதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்திருப்பதால், முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் எல்ஐசி ஐபிஓ விற்பனை பொது முதலீட்டாளர்களுக்கு இன்று முதல் பங்கு விற்பனை தொடங்குவதால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்காணித்து வருகிறார்கள்.இதனால் முதலீடு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் செயல்படுகிறார்கள்.
மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. ஆனால், பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியபின் புள்ளிகள் படிப்படியாக சரியத் தொடங்கியது.

சரிவு

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து, 56,942 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 14 புள்ளிகள் குறைந்து, 17,054 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது. 

பிரிட்டானியா லாபம்

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் 16 பங்குகள் சரிவிலும் உள்ளன. 1502 பங்குகள் மதிப்பு உயர்வுடனும், 486 பங்குகள் மதிப்பு சரிந்தும், 107 பங்குகள் மதிப்பு சரியாமலும் உள்ளன

நிப்டியில் பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் உள்ளன். ஹின்டால்கோ, அப்பலோ மருத்துவமனை, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹெச்டிஎப்சி லைப் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன

உலோகம், மருந்துத்துறை வீழ்ச்சி

மும்பைப் பங்குச்சந்தையில் பவர்கிரிட், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, மாருதி, இன்போசிஸ், எஸ்பிஐ பங்குகள் விற்பனை லாபத்துடன் நகர்கின்றன. பார்தி ஏர்டெல், டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹின்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன

நிப்டியில் உலோகத்துறை, மருந்துத்துறை, நுகர்வோர் பொருட்கள் துறை சரிவில் உள்ளன. ரியல்எஸ்டேட், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, ஊடகம், நிதிச்சேவை, எப்எம்சிஜி ஆகிய துறை பங்குகள் லாபத்தில் உள்ளன