share market today :வர்த்தகத்தின் முதல்நாளான இன்று தேசியப் பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தையில் பெரும் சரிவு காணப்படுகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாரு காணதவகையில் சரிந்துள்ளது.
வர்த்தகத்தின் முதல்நாளான இன்று தேசியப் பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தையில் பெரும் சரிவு காணப்படுகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாரு காணதவகையில் சரிந்துள்ளது.
பெடரல் வங்கி
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி(தலைமைவங்கி) வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. இதுவரை 75 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வட்டிவீதம் உயர்வு போதாது, இன்னும் அதிகளவு வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின்கட்டுப்பாட்டு அளவைவிட தாண்டிச் சென்றதால், ரிசர்வ் வங்கி, கடந்த வாரத்தில் வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. இந்தஇரு நிகழ்வுகளும் இந்தியப் பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்திவருவதால், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து வருகிறது.கடந்த 6ம் தேதி மட்டும் ரூ.5,517 கோடிக்கு பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். கடந்த 7 மாதங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறுவதுதொடர்ந்து வருகிறது.

இதுவரை 7 மாதங்களில் ரூ.1.65 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள்பங்குச்சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் வட்டிவீதத்தை உயர்த்தும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரு காரணிகளும் இந்தியப் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை காலையில் ஏற்படுத்தின.
பெரும் சரிவு
மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியவுடனே சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 678 புள்ளிகள் குறைந்து, 54,156 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 198 புள்ளிகள் சரிந்து, 16,212 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.
![]()
30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் பவர்கிரிட், சிப்லா பங்கைத் தவிர மற்ற அனைத்துப் பங்குகளும் சரிவில் உள்ளன. ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, மாருதி, பஜாஜ் ட்வின்ஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன. நிப்டியில் ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா மோட்டார்ஸ்பங்குகள் சரிவைநோக்கி உள்ளன. நிப்டியில் அனைத்து துறைகளும் வீழ்ச்சியில் உள்ளன.
வரலாற்று வீழ்ச்சி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு காலை வரலாறு காணாத வகையில் சரிந்து ரூ.77.40க்கு விற்பனையாகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் டாலருக்கு எதிராக ரூ.77.05 ஆக இருந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ரூ.77.42 ஆக இன்று காலை வர்த்தகத்த் தொடக்கத்தில் சரிந்து வருகிறது
