fpi outflow: இந்தியாவிலிருந்து தொடர்ந்து8-வது மாதமாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து தொடர்ந்து8-வது மாதமாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.45,276 கோடியை திரும்பப் பெற்றுள்ளனர் என்று தேசிய செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிட் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020ம் ஆண்டு மார்ச்சில் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் உள்நாட்டு பங்குச்சந்தையிலிருந்து ரூ.62ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர்ந்து 8-வது மாதமாக திரும்பப் பெற்றுள்ளனர். ஏறக்குறைய நீண்டகாலமாக முதலீடு திரும்பப் பெற்றுவருவது இதுதான் முதல்முறையாகும்.
அது மட்டும்லாமல் கடந்த 1993ம் ஆண்டுக்குப்பின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகமான முதலீட்டை திரும்பப் பெற்றது இது 2-வது முறையாகும். கடந்த மே மாதத்தில் மட்டும்ரூ.45 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை பங்குச்சந்தையிலிருந்து திரும்பப் பெற்றதால் கடந்த மே மாதத்தில் மட்டும் நிப்டி, சென்செக்ஸ் கடுமையாகச் சரிந்தது, 3 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் பங்குச்சந்தையின் மோசமான செயல்பாடாகஅமைந்தது.

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் பங்குப் பத்திரங்கள் மூலம் அதிகமான வட்டி கிடைக்கும், முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்றுவருவது அதிகரித்து வருகிறது.
இது தவிர உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், சீனால் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் இருப்பது, இதனால் பொருட்களின் சப்ளையில் ஏற்படும் சிக்கல் ஆகியவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச நிதியம் உலக ஜிடிபி நடப்பு நிதியாண்டில், 3.6 சதவீதமாகக் குறைந்தது, முன்பு 4.4 சதவீதமாக கணித்திருந்தது.
2022ம் ஆண்டில் மட்டும் இந்தியப் பங்கு்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் இதுவரை ரூ.1.72 லட்சம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
