இ்ந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் நிலவியதால், சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் குறைந்த அளவு ஏற்றத்தோடு முடிந்தன.

இ்ந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் நிலவியதால், சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் குறைந்த அளவு ஏற்றத்தோடு முடிந்தன.

இந்தியப் பங்குச்சந்தை உயர்வுக்கு 2 முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று சர்வதேச சந்தைச் சூழல் சாதகமாக இருப்பது, அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வந்தநிலையில் தற்போது வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்செக்ஸ், நிப்டி உயர்ந்து வருகிறது. அதிலும் நிப்டி 18ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.

வரியே இல்லாமல் பொருளாதாரத்தை ஒர் அரசால் இயக்க முடியுமா? ஏதாவது நாடுகள் இருக்கிறதா?

அமெரி்க்கப் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார மந்தநிலைக்குள் அமெரிக்கப் பொருளாதாரம் செல்லும் என்று முன்பு கணிக்கப்பட்டநிலையில் முன்னேற்றத்தை நோக்கி நகர்வது நம்பிக்கைக்குரியதாகும். 

இந்தியச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துவந்தநிலையில், கடந்த 4 நாட்களாக 4500 கோடி டாலருக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். இது இந்திய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. 

காலை ஏற்றத்துடன் பயணித்த சென்செக்ஸ், நிப்டி பிற்பகுதியில் சந்தையில் ஏற்பட்ட ஊசலாட்டத்தால் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. இருப்பினும் வர்த்தகம் சரிவில் முடியாமல் ஏற்றத்தோடு முடிந்தது. 
மாலை வர்தத்கம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 44 புள்ளிகள் அதிகரித்து 61,319 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 18,035 புள்ளிகளி் நிலைபெற்றது.

பங்குச்சந்தை| சென்செக்ஸ் 350புள்ளிகள் உயர்வு! நிப்டி 18,000-க்கு மேல் ஏற்றம்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 12 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 18 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. டெக்மகிந்திரா, விப்ரோ, பஜாஜ் பின்சர்வ், கோடக்மகிந்திரா, என்டிபிசி, ஐடிசி, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் லாபத்தில் முடிந்தன.

நிப்டி துறைகளில் ஐடி, உலோகம், ஊடகம், மருந்துத்துறை, ரியல்எஸ்டேட் பங்குகள் லாபத்தில் முடிந்தன. வங்கி, எப்எம்சிஜி, ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கி தனியார்வங்கித்துறை பங்குகள் சரிவில் முடிந்தன.

நிப்டியில் ஓஎன்ஜிசி, டெக்மகிந்திரா, அப்பலோ மருத்துவமனை, டிவிஸ் லேப்ஸ் நெஸ்ட்லே இந்தியா பங்குகள் லாபம் ஈட்டின. பிபிசிஎல், பஜாஜ் பைனான்ஸ், எச்யுஎல், எச்டிஎப்சி லைப், மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்குகள்சரிவில் முடிந்தன