வாரத்தின் முதல் நாளான இன்று பங்குசந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர்.
அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக பங்குசந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த பங்கு சந்தையும் ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால், மும்பை பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 565 புள்ளிகள் உயர்ந்து 60,365 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர்.
அதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 165 புள்ளிகள் உயர்ந்து 17,760 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
