share market news today: மும்பை பங்குச்சந்தை(BSE), தேசியப் பங்குச்சந்தை(NSE) கடந்த 3 வாரங்களாக ஏற்றத்துடன் இருந்து நிலையில் இந்த வாரம் சந்தையின் போக்கை  நிர்ணயிக்கும் 7 காரணிகள் இருக்கின்றன. அதைத் தெரிந்து கொண்டால் பங்கு வியாபாரம் சுமூகமாக இந்த வாரம் அமையும்.

share market news today: மும்பை பங்குச்சந்தை(BSE), தேசியப் பங்குச்சந்தை(NSE) கடந்த 3 வாரங்களாக ஏற்றத்துடன் இருந்து நிலையில் இந்த வாரம் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் 7 காரணிகள் இருக்கின்றன. அதைத் தெரிந்து கொண்டால் பங்கு வியாபாரம் சுமூகமாக இந்த வாரம் அமையும்.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பியது, அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்து வருவது போன்றவைகடந்த வாரம் பங்குச்சந்தைக்கு ஊக்கத்தை அளித்தனர். இதனால் சென்செக்ஸ் 1.4 சதவீதம் உயர்ந்தது, வங்கி, தகவல்தொழில்நுட்பம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் லாபமடைந்தன. நிப்டியில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் நல்ல லாபடைந்தன.

இந்நிலையில் இந்த வாரம் பங்கச்சந்தையை பாதிக்கக்கூடிய 10 முக்கிய காரணிகள் உள்ளன. அதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

ரிசர்வ் வங்கி கூட்டம்

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் வரும் 8ம் தேதி நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி வீதம் 25 முதல் 75 புள்ளிகள் வரை உயர்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வட்டிவீதம் உயர்ந்தால் அதன் தாக்கம் பங்குச்சந்தையி்ல் இருக்கும், சந்தையின் வர்த்தகத்தையும் பாதித்து கடும் ஊசலாட்டத்தை உருவாக்கும்

ஐரோப்பிய கவுன்சில் கூட்டம்
ஐரோப்பிய மத்திய வங்கி வரும்9ம் தேதி கூடி ஆலோசிக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஐரோப்பாவில் அதிகரி்த்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வட்டிவீதத்தை உயர்த்தலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு வட்டி வீதம் உயர்ந்தால், உலகளவில் கடனுக்கான வட்டி வீதம் உயரும். 

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கறுப்புத் தங்கம் எனச் சொல்லப்படும் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்திலிருந்தே ஏறு முகமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பேரல் 123 டாலராக உயர்ந்தது. ரஷ்யா மீதான தடை ஐரோப்பிய யூனியன் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ஒபைக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறியதையடுத்து, வாரக்கடைசியில் விலைக் குறைந்தது. கச்சா எண்ணெய்விலையில் ஏற்படும் மாற்றமும்பங்குச்சந்தையை பாதிக்கும்

பொருளாதார புள்ளிவிவரங்கள்

இந்த வாரத்தில் அரசின் பல்வேறு பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாவதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். வரும் 10ம் தேதி ஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை புள்ளிவிவரங்கள் வருகின்றன. சீனாவின் பணவீக்க புள்ளிவிவரங்கள் வெளியாகின்றன. இதில் சீனாவின் வர்த்தக சமநிலையை உலகச்சந்தை எதிர்பார்த்து வருகிறது. அதில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டால் இந்தியச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

பருவமழை

தென் மேற்குப் பருவமழை இந்தவாரம் தொடங்க இருக்கிறது. பருவமழை தொடங்கினால் வரும் நாட்களில் உணவுப் பொருட்கள் விலை குறையத் தொடங்கும். இது முதலீட்டாளர்களுக்கு ஊக்கமானநிலையை ஏற்படுத்தும், பருமழையால் கிராமங்களில்,விவசாயிகள் வருமானம் உயரும், கிராமங்களில் தேவை தூண்டிவிடப்படும் என்பதால், பருமழை தொடங்கும் செய்தியும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்நிய முதலீட்டாளர்கள்

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தையில் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்து வருகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் ரூ.3,417 கோடிக்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர் 2022ம் ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.1.80 லட்சம் கோடி அந்நிய முதலீடு வெளியே சென்றுள்ளது. ஆதலால், இந்த வாரம் அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடு விலக்கமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை

கடந்த மே மாதம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு நிலவர அறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வேளாண் பணிகள் தவிர்த்து பிற பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. இருப்பினும் பொருளாதார வளர்ச்சிக் குறைவு இருந்து வருகிறது, பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் புதிதாக 3.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த அறிக்கை வந்தபின்புதான் டெஸ்லா, மெட்டாஉள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 10 சதவீதம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் பங்குச்சந்தையை பாதிக்கும் காரணிகளாகும்