டாடா குழுமத்தின் முக்கியப் பங்குதாரர் தொழிலதிபர் பலூன்ஜி மிஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்
Pallonji Mistry passed away: ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் தலைவர் பலூன்ஜி மிஸ்திரி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93.
ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் தலைவர் பலூன்ஜி மிஸ்திரி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93.
google, Amazon வேண்டாம்! படிக்கும்போதே facebookக்கில் வேலை பெற்ற அங்கன்வாடி ஊழியர் மகன்
பார்சி குடும்பத்தில் பிறந்தவர் பலூன்ஜி மிஸ்திரி. இவருக்கு பாஸ்டி பெரின் துபாஷ் எனும் மனைவியும், ஷபூர் மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி ஆகிய இரு மகன்களும், லைலா மிஸ்திரி, அலூ மிஸ்திரி எனும் மகள்களும் உள்ளனர்.
ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தை ஷபூர் நடத்தி வருகிறார். இவரின் மகன் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தில் கடந்த 2012 முதல் 2016ம் ஆண்டுவரை தலைவராக இருந்தவர். பலூன்ஜி மிஸ்திரி டாடா குழுமத்தில் 18.37% பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியெல்லாம் முடியாது! ட்ரண்டாகும் பாஸ்டேக் வீடியோ போலி: பேடிஎம், என்பிசிஐ விளக்கம்
ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் நியோல் டாடா, ஷபூர்ஜியின் மகள் அலூ மிஸ்திரியை திருமணம் செய்துள்ளார். டாடா குழுமத்தில் முக்கிய பங்குதாராரக பலூன்ஜி மிஸ்திரி இருந்தார்.
கடந்த 1929ம் ஆண்டு பிறந்த பலூன்ஜி மிஸ்திரி, மும்பையில் உள்ள கத்தீட்ரல் மற்றும் ஜான் கெனன் பள்ளிப்படிப்பையும், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். தனது 18வயதிலேயே, தந்தையுடன் சேர்ந்து குடும்ப வணிகத்தில் பலூன்ஜி மிஸ்திரி ஈடுபட்டார். தனது தந்தை கடந்த 1865ம் ஆண்டு தொடங்கிய தொழிலை பலூன்ஜி மிஸ்தி அபுதாபி, துபாய், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரிவுபடுத்தினார்.
tiruppur: நாடுமுழுவதும் 75 திருப்பூர் மாதிரிகள்: பியூஷ் கோயல் திட்டம்
156 ஆண்டுகள் பழமையான ஷபூர்ஜி பலூன்ஜி குழுமம் தற்போது ஆப்பிரி்க்கா, இந்தியா, மத்தியகிழக்கு நாடுகள், தெற்காசியாவில் பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மும்பையில் உள்ள புகழ்பெற்ற மலபார் ஹில், ரிசர்வ் வங்கி, பிஎஸ்இ, மும்பை பிராபோர்ன் மைதானம்,உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற கட்டிடங்களை கட்டியது பலூன்ஜி குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல்
தொழிலதிபர் பலூன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவி்த்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ பலூன்ஜி மிஸ்திரி மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உலக வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை பலூன்ஜி மிஸ்திரி செய்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், எண்ணிலடங்கா நலம்விரும்பிகளுக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரின் ஆன்மா அமைதி பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.