FASTag scam video: அப்படியெல்லாம் முடியாது! ட்ரண்டாகும் பாஸ்டேக் வீடியோ போலி: பேடிஎம், என்பிசிஐ விளக்கம்
FASTag scam video: பாஸ்டேக் குறித்த வீடியோ கடந்தவாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகிய நிலையில் அந்த வீடியோவில் வரும் காட்சிகள் பொய்யானவை,அப்படி நடக்க வாய்பில்லை என்று பேடிஎம் நிறுவனம், தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விளக்கம் அளித்துள்ளன.
பாஸ்டேக் குறித்த வீடியோ கடந்தவாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகிய நிலையில் அந்த வீடியோவில் வரும் காட்சிகள் பொய்யானவை,அப்படி நடக்க வாய்பில்லை என்று பேடிஎம் நிறுவனம், தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விளக்கம் அளித்துள்ளன.
நாடுமுழுவதும் 75 திருப்பூர் மாதிரிகள்: பியூஷ் கோயல் திட்டம்
பாஸ்டேக் ஸ்டிக்கரிலிருந்து அதிகாரபூர்வமாக டோல்கேட்டிலிருக்கும் எந்திரம் மூலம்தான் பணம் பரிமாற்றம் வேறு எந்த எந்திரத்தாலும், நபராலும் பணம்பரிமாற்றம் ஆகாது. 4 அடுக்கு பாதுகாப்புமுறைகள் பாஸ்டேக்கில் செய்யப்பட்டுள்ளன என்று என்சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் நிற்கக் கூடாது என்பதற்காக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.இதன்படி வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் டோல்கேட் பகுதிக்குள் வந்ததும், அங்குள்ள கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, சுங்கக்கட்டணம் பாஸ்டேக் ஸ்டிக்கரிலிருந்து கழிக்கப்படும்.
FD மூலம் அதிக வருவாய் வேணுமா? இந்த 4 விஷயத்தை மறக்காம செய்யுங்க, குபேரன் கொட்டுவாரு..
இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வங்கிகள் வழங்குகின்றன. அந்த ஸ்டிக்கரில் பணம் தீர்ந்துவிட்டால், நம்முடைய தேவைக்கு ஏற்றார்போல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நம்முடைய பாஸ்டேக் ஸ்டிக்கரிலிருந்து வேறுயாரும் ரீசார்ஜ் தொகையை எடுக்க முடியாது.
ஆனால் கடந்த வாரம் ஒரு வீடியோ ட்ரண்டானது. அந்த வீடியோவில் ஒரு சிறுவன் காரின் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டிப்பார். அப்போது அந்த சிறுவன் கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் பாஸ்டேக்பட்டைக்கு சென்றதும். அந்த சிறுவன் கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட்வாட்ச், பாஸ்டேக் பட்டையிலிருக்கும் பணத்தை எடுத்துக்கொள்வது போன்று வீடியோ இருந்தது. இதைப் பார்த்த அந்த காரில் இருந்தவர் அந்த சிறுவனை விரட்டுவது போன்று வீடியோவில் இருந்தது
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் டிரண்டானது. பலரும் தங்கள் காரில் இருக்கும் பாஸ்டேக்பட்டையில் ரீசாரஜ் செய்யப்பட்டிருக்கும் பணத்தை எடுக்க முடியுமா என்று சந்தேகத்தை எழுப்பினர். இதையடுத்து, பேடிஎம் மற்றும் என்சிபிஐ அந்த வீடியோ போலியானது என விளக்கம் அளித்துள்ளது.
அட்ராசக்கை! 2 மாசத்துல ரூ.500 கோடி வருவாய்: வியக்கவைத்த ஓலாவின் அறிக்கை
இது குறித்து பேடிஎம் நிறுவனம் ட்விட்டரில் அளித்த விளக்கத்தில் “ இந்த வீடியோ போலியானது. பாஸ்டேக்கில் இருக்கும் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகாரபூர்வ டோல்கேட் கருவிகள் மட்டும்தான் எடுக்க முடியும். டோல்கேட் நிர்வாகங்கள் பலமுறை பரிசோதனை செய்தபின்புதான் அந்தக் கருவிகளைப் பொறுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
என்சிபிஐ அளித்துள்ள விளக்கத்தில் “ பாஸ்டேக் பட்டை 4 அடுக்கு பாதுகாப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. என்சிபிஐ, பட்டை வழங்கிய வங்கி, டோல்பிளாஸா, கட்டணம் பெறும்வங்கி என 4 பாதுகாப்புஅமைப்புகளை மீறி ஒருவர் பாஸ்டேக் ஸ்டிக்கரில் இருக்கும் கட்டணத்தை எடுக்க முடியாது. பாஸ்டேக் முறை என்பது பாதுகாப்பானது.யாரும் அந்த வீடியோவை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.