fixed deposit interest: FD மூலம் அதிக வருவாய் வேணுமா? இந்த 4 விஷயத்தை மறக்காம செய்யுங்க, குபேரன் கொட்டுவாரு..
fixed deposit interest :ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை 2 முறை உயர்த்தி 90 புள்ளிகள் அதிகரித்துவிட்டது. இதனால், கடனுக்கான வட்டி எந்தஅளவு வேகமாக அதிகரித்ததோ அதேஅளவுக்கு, வங்கியில், வைப்பு நிதிக்கான வட்டிவீதமும் உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை 2 முறை உயர்த்தி 90 புள்ளிகள் அதிகரித்துவிட்டது. இதனால், கடனுக்கான வட்டி எந்தஅளவு வேகமாக அதிகரித்ததோ அதேஅளவுக்கு, வங்கியில், வைப்பு நிதிக்கான வட்டிவீதமும் உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ, பேங்க்ஆப் பரோடா, ஹெச்டிஎப்சி, கோடக் மகிந்திரா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டிவீதத்தை உயர்த்திவிட்டன. இன்னும் பல வங்கிகளில் எதிர்காலத்தில் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தும். வைப்பு நிதிக்கான வட்டிவீதம் உயர்த்தப்படும் இந்தக் காலம் முதலீட்டாளர்களுக்கு பொன்னானது.
கடையசாத்து! 8 மாசத்துல 2 நிறுவன வர்த்தகத்தை இழுத்து மூடிய ஓலா
இந்தக் காலத்தைப்பயன்படுத்தி வைப்பு நிதியிலிருந்து அதிகபட்ச வருவாய் பலன்களை கிடைக்க தி்ட்டமிடுவது அவசியமானது. அதற்கு 4முக்கிய செயல்களை நன்கு யோசித்து செய்தாலே வைப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் வருவாய் கொட்டும்
குறுகியகால வைப்பு நிதி
நீண்டகாலத்தில் வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தால், அதை முதலில் எடுத்து குறுகிய காலம் அல்லது நடுத்தர காலத்துக்கு வைப்பு நிதியாக வைக்கலாம். இனிமேல் வைப்பு நிதியில் முதலீடு செய்ய நினைப்பவர்களும் இதை பின்பற்றலாம். அதாவது ஒவ்வொரு வங்கியும் குறுகிய காலம் மற்றும் நடுத்தர காலத்துக்கு எவ்வளவு வட்டி வீதம் வழங்குகிறார்கள் என்பதை கண்டறிந்து அதில் முதலீடு செய்ய வேண்டும். குறுகியகாலம், நடுத்தர காலத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் அதிகமாக இருக்கும்
வருகிறது இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங்: Bharat-NCAP வரைவுக்கு நிதின் கட்கரி ஒப்புதல்
நீண்டகால முதலீட்டைதவிருங்கள்
வைப்பு நிதி முதிர்ச்சி அடைந்துவிட்டு, மீண்டும் புதுப்பிக்கும் வாயப்புக் கிடைத்தால் அதை நீ்ண்டகால திட்டத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து குறுகியகாலத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீண்டகாலத்தில் வட்டி அதிகம் கிடைக்கும் என எண்ணி அதில் முதலீடு செய்யாமல் குறுகிய காலத் திட்டங்களைத் தேர்வு செய்தால் விரைவாக வட்டிவீதம் உயரும்போது வருவாய் இயல்பாகவே அதிகரிக்கும். அதிகபட்சம் ஓர் ஆண்டு வைப்பு நிதிக்கு மேலாக வைப்பதை தவிர்க்கலாம்.
பெரிய தொகையை தவிர்க்கலாம்
வைப்பு நிதியில் மொத்த தொகையாக முதலீடு செய்யாமல் அதை பிரித்து, பல்வேறு காலங்களில் முதலீடு செய்யலாம். உதாரணமாக ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியில் டெபாசிட் செய்வதற்குப்பதிலாக அதை பிரித்துமுதலீடு செய்யலாம். அதாவது 5 பிரிவுகளாகப் பிரித்து, ஒரு லட்சத்தை ஓர் ஆண்டுக்கும், 2 ஆண்டுக்கும், 3 ஆண்டுக்கும், 4 ஆண்டுக்கும், 5 ஆண்டுக்கும் பிரித்து முதலீடு செய்யும் போது வருமானம் ஆண்டுதோறும் சீராக, உயர்ந்து வரும். 2 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்த தொகையை அடுத்த2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்த தொகையை கூடுதலாக ஓர் ஆண்டு வைக்கலாம். இதுபோல் பிரித்து முதலீடு செய்வதால் வருமானம் ஏணி போல் படிப்படியாக உயரும்.
ஜாக்பாட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி( DA) உயர்வு?
ப்ளோட்டிங் வட்டி
ப்ளோட்டிங் வைப்பு நிதியில் முதலீடு செய்வது வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டிவருவாயை அதிகரிக்க உதவும். சந்தை நிலவரத்துக்கு ஏற்பட வட்டி உயர்த்தப்படும் போது கிடைக்கும் பலன்கள் அதிகமாக இருக்கும். அதேநேரம், வட்டிவீதம் குறைக்கப்படுவது, குறித்தும் கவலைப்படாமல் முதலீட்டாளர்கள் இருக்கலாம். ரெப்போ ரேட்டோடு ப்ளோட்டிங் வைப்பு நிதி இணைந்திருப்பதால், வட்டி வருமானம் பற்றி கவலைப்பட வேண்டாம்