இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி : ஆண்டின் முதல் வர்த்தக நாளே சரிவு ....!!!

புத்தாண்டின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு வர்த்தம் வீழ்ச்சி கண்டது. இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிப்டி வர்த்தக நேர முடிவில், இறக்கத்துடன் முடிவுற்றது.

அதன்படி,

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 6.30 புள்ளிகள் சரிந்து, 8,179.50 புள்ளிகளிலும்,

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 31.01 புள்ளிகள் சரிந்து 26,595 .45 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளது

லாபம்கண்டநிறுவனங்கள் :

AMBUJACEM, ULTRACEMCO, TATASTEEL உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவுற்றன.

இழப்பை சந்தித்தநிறுவனங்கள் :

HDFC,,BANKBARODA, SBIN உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு : ரூபாய் 68.21 ஆக உள்ளது.