MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் வாங்குற பழக்கம் அரசையே குழப்புது.. மீண்டும் வரி உயருமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்

தங்கம் வாங்குற பழக்கம் அரசையே குழப்புது.. மீண்டும் வரி உயருமா? அதிர்ச்சியில் பொதுமக்கள்

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரிப்பால் ஏற்படும் அந்நிய செலாவணி இழப்பு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த, மத்திய அரசு இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 01 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்க இறக்குமதி வரி
Image Credit : X

தங்க இறக்குமதி வரி

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இந்தியர்களின் தங்கத்தின் மீதான ஆர்வம் குறையாமல் மத்திய அரசை கவலையடையச் செய்தது. இதன் விளைவாக, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதும் அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்த, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
வெள்ளி இறக்குமதி
Image Credit : X

வெள்ளி இறக்குமதி

இறக்குமதி அதிகரிப்பதன் முக்கிய பிரச்சனை அந்நிய செலாவணி இழப்பு ஆகும். வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கும்போது டாலரில் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் கனிசமான பகுதி தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு இந்தியா லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்தது. இதன் தாக்கமாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Related Articles

Related image1
Gold Rate: பட்ஜெட் நாளில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா?
Related image2
பட்ஜெட் 2026: இந்த வார்த்தைகள் தெரியாவிட்டால் முழு குழப்பம் தான்!
34
தங்க விலை உயர்வு
Image Credit : X

தங்க விலை உயர்வு

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு கள்ளக்கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்தது. ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, வரி மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பே தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. வரி உயர்ந்தால் இறக்குமதி குறையும் என அரசு நம்புகிறது.

44
ரூபாய் மதிப்பு சரிவு
Image Credit : generated by chatgpt

ரூபாய் மதிப்பு சரிவு

ஆனால் விலை உயர்வும், வரி அதிகரிப்பும் இந்தியர்களின் தங்க மோகம் மீது பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பதே நிஜம். நகை வாங்குதல் ஓரளவு குறைந்தாலும், நாணயங்கள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் டிஜிட்டல் தங்க முதலீடுகள் அதிகரித்துள்ளன. மேலும், தொழில்துறை பயன்பாடு மற்றும் முதலீட்டு ஆர்வம் காரணமாக வெள்ளியின் தேவையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், தங்கம் மட்டுமல்ல, வெள்ளி இறக்குமதியும் அரசின் கவலை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
வெள்ளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Related Stories
Recommended image1
Gold Rate: பட்ஜெட் நாளில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா?
Recommended image2
பட்ஜெட் 2026: இந்த வார்த்தைகள் தெரியாவிட்டால் முழு குழப்பம் தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved