உலகப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஊசலாட்டத்துடன் வர்த்தகம் நடந்ததால், இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் இன்று சரிவுடன் முடிந்தன.
உலகப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஊசலாட்டத்துடன் வர்த்தகம் நடந்ததால், இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் இன்று சரிவுடன் முடிந்தன.
இங்கிலாந்து மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கியில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தால், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
மாறாக பலரும் முதலீட்டை திரும்பப் பெற்றவாறு இருந்தனர். அதுமட்டுமல்லாமல் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல்ஒன்று 93 டாலராக உயர்ந்தது, இந்தியா, அமெரி்க்காவில் பங்குபத்திர விற்பனை சுணக்கம் ஆகியவற்றால் சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடியக் காரணமாக அமைந்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் இடையே 517 புள்ளிகள்வரை சரிந்த சென்செக்ஸ் வர்த்தகம் முடிவில், 143 புள்ளிகள் சரிந்து 58,645 புள்ளிகளில் முடிந்தது.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 44 புள்ளிகள் குறைந்து 17,516 புள்ளிகளில் முடிந்தது. இரு சந்தைகளும் 0.24 சதவீதம் சரிந்து இன்று காணப்பட்டது. மிட்கேப் பங்குகள் 0.7 சதவீதமும், ஸ்மால் கேப் 0.45 சதவீதமும் சரிவைச்சந்தித்தன
ஆசியப் பங்குச்சந்தைப் பொறுத்தவரை ஜப்பானின் நிக்கி 0.7 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி 1.6 சதவீதமும் வளர்ச்சி அடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள்கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
அதைத் தொடர்ந்து மகிந்திரா அன்ட் மகிந்திரா, கோடக் வங்கி, பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, பவர் கிரிட், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியநிறுவனங்களின் பங்குகல் சரிவைச்சந்தித்தன
அதேசமயம், சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச்ச ந்தித்தன.
