சர்வதேச பதற்றங்கள் இருந்தபோதிலும், இந்திய பங்குச் சந்தைகள் திங்களன்று ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயர்ந்து 81,796 புள்ளிகளிலும், நிஃப்டி 227 புள்ளிகள் உயர்ந்து 24,946 புள்ளிகளிலும் முடிவடைந்தன. 

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமை இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சதை குறியீட்டென் சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயர்ந்து 81 ஆயிரத்து 796 புள்ளிகளில் வர்த்தகமாயின. அதேபோல் தேதிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃப்டி 227 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 946 புள்ளிகளில் முடிவடைந்தன. வர்த்தகத்தின் போது, மிகப்பெரிய பங்குகள் நம்பிக்கையுடன் மேலே சென்றாலும், சில சிறு மற்றும் நடுத்தர பங்குகள் எதிர்மறை பாதிப்பை எதிர்கொண்டன.

ஏற்றமும் இறக்கமும்

வர்த்தகத்தின் முடிவில் 101 பங்குகள் 52 வார உச்சத்தை எட்டின. மருந்து உற்பத்தி, நிதி, வங்கி மற்றும் கட்டுமானத்துறை பங்குகள் விலை உச்சம் அடைந்தன. Bharat Electronics,JK Cement, Laurus Labs, Maharashtra Scooters, Manappuram Finance,Max Healthcare, Max Financial Services, Muthoot Finance, Narayana Hrudayalaya, Ramco Cements உள்ளிட்ட பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரிவழங்கின. Power Grid, HDFC Bank, Reliance Industries, Tata Steel, Infosys ஆகியவை இன்று பெரிய அளவில் வளர்ச்சி பெற்றன. இவை அனைத்தும் தங்களது வலுவான பணி மற்றும் நிதி நிலை முடிவுகளின் அடிப்படையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன. அதேபோல் 71 பங்குகள் 52 வாரக் குறைந்த நிலையை எட்டியது. Easy Trip Planners, Jai Balaji Industries, Naksh Precious Metals, National Standard, Navkar Urbanstructure, Shalby, Schloss Bangalore ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன. Sun Pharma, Tata Motors, Adani Ports மற்றும் Dr. Reddy's பங்குகள் சிறிய அளவில் வீழ்ச்சியடைந்தன.

சந்தைகள் ஏற்றம் பங்குகள் விலை சரிவு

இன்று பங்குச்சந்தை ஒரு “divergent day” என்றே கூறலாம்—சில பங்குகள் உச்சத்தை எட்டிய பின்பும், பல பங்குகள் கீழே விழுந்தன. இது முதலீட்டாளர்களுக்குள் ஏற்கனவே இருந்த எச்சரிக்கையும், ஒரே நேரத்தில் சில துறைகளில் இருந்த நம்பிக்கையும் வெளிப்படுத்துகிறது.அதாவது, பெரிய நிறுவனங்களில் நம்பிக்கை அதிகமாக இருந்தாலும், சில வர்த்தக பங்குகள் எதிர்பாராத சரிவை சந்தித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் - ஈரான் இடையே சமாதான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக வெளியான செய்தி, பங்குச் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இது சந்தையின் எதிர்மறை எண்ணங்களை ஓரளவு கட்டுப்படுத்தியது.இரு நாடுகளும் நேரில் பேச வேண்டும், வர்த்தக உறவுகள் மூலம் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். முந்தைய சில நாட்களில் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதன் பின், முதலீட்டாளர்கள் 'short covering' முறையில் வாங்குதல் செய்தனர். இது சந்தையை மீண்டும் எழச் செய்தது என சந்தை வல்லுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மெக்ரோ பொருளாதார நிலைமை சீராக உள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது, மேலும் இந்த ஆண்டு சாதாரணத்தைக் மீறும் மழை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது இதுவும் சந்தையின் எழுச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியா 6.3% வளர்ச்சி தரும் என 2026க்கான கணிப்பை உலக வங்கி தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை கொடுத்ததால் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன.

மீண்டும் ஏற்றம் காணுமா சென்செக்ஸ்

நிப்டி 50 இன்றைய வர்த்தகத்தில் 24,950 அளவை மீண்டும் எட்டியது. இது இன்னும் மேலே செல்லும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. கோடக் செக்யூரிட்டீஸ் கூறுகையில், 24,750ஐ மீறியதும் சந்தையில் மேலே செல்லும் இயக்கம் தொடங்கும் என்றும், 25,000 வரை செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. அரசியல் மற்றும் உலகளாவிய பதற்றங்கள் இருந்தபோதும், இந்திய பங்குச் சந்தை இடைநிறுத்தமின்றி மேலே சென்றுள்ளது. இது, சமாதானம், பொருளாதார வலிமை, மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் சேர்க்கையான விளைவாகும்.நேர்மறை சிந்தனையுடன் முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தையில் நுழைந்தனர் என்பது முக்கிய காரணமாகும். இன்றைய சந்தை நிலவரம் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் Sensex மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் Nifty இரண்டும் 1 சதவீதம் வரை மேலே சென்று, வலுவான மீட்சியை காட்டின. இது பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நேர்மறையான  சிக்னலாக அமைகிறது.