Asianet News TamilAsianet News Tamil

Share Market Today: ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி 18,500க்கு மேல் உயர்வு: PSU வங்கி பங்கு லாபம்

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நிப்டி மீண்டும், 18500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

Sensex is up 150 points, and the Nifty is above 18,500. PSU banks are up.
Author
First Published Dec 13, 2022, 9:54 AM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நிப்டி மீண்டும், 18500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

சர்வதேச சூழல் சாதகமாக இருப்பது, இந்தியாவில் நவம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் முதல்முறையாக இந்த ஆண்டில் 6 சதவீதத்துக்குள் வந்தது முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளித்தது. இதனால் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு

Sensex is up 150 points, and the Nifty is above 18,500. PSU banks are up.

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு தானியங்கள் விலை குறைந்துள்ளது, பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் இருப்பதும் விலைவாசி உயர்வு குறைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஆனால், அக்டோபர் மாதத்தில் உற்பத்தி குறியீடு 4 சதவீதமாகக் குறைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு வேதனையை அளித்துள்ளது. இதனால், உற்பத்தி துறையை ஊக்குவிக்க அரசு திட்டங்களை வகுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

மறந்துடாதிங்க! பான் கார்டு ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை

சாதகமான போக்கு காரணமாக இந்தியச் சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. மும்பைபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி, 117 புள்ளிகளாகக் குறைந்து, 62,247  புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 25 புள்ளிகள் அதிகரித்து, 18,522 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

Sensex is up 150 points, and the Nifty is above 18,500. PSU banks are up.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 9 நிறுவனப் பங்குகள் விலை குறைந்துள்ளன, மற்ற 21 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, மாருதி, பார்திஏர்டெல், ஏசியன்பெயின்ட்ஸ், என்டிபிசி, சன்பார்மா, பவர்கிரிட், ஹெச்யுஎல் ஆகிய பங்குகள் விலை குறைந்துள்ளன

பங்குச்சந்தை கடும் ஊசலாட்டம்: சென்செக்ஸ் சரிவு: நிப்டி உயர்வு: PSU வங்கி பங்குகள் லாபம்

நிப்டியில் டாடா மோட்டார்ஸ், டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் வங்கி, அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் லாபத்தில் உள்ளன. அப்பலோ மருத்துவமனை, பிபிசிஎல், பவர்கிரிட், ஹெச்யுஎல், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை குறைந்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios