பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதி, அந்த வாய்ப்பை தவறவிடுபவர்களின்  பான்கார்டு செயலிழந்துவிடும் என்று வருமானவரித்துறை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதி, அந்த வாய்ப்பை தவறவிடுபவர்களின் பான்கார்டு செயலிழந்துவிடும் என்று வருமானவரித்துறை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார்-பான்கார்டை இணைக்காவிட்டால், 2023, ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.

சுலா ஒயின்யார்ட் நிறுவனம் இன்று ஐபிஓ வெளியீடு: ஒரு பங்கு விலை என்ன தெரியுமா?

இது தொடர்பாக வருமானவரித்துறை ட்விட்டரில் வெளியிட்ட புதிய எச்சரிக்கையில் கூறுகையில் “ வருமானவரிச் சட்டம் 1961ன்படி பான்கார்டு வைத்திருப்போர் அனைவரும், அதை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமாகும். ஆதார் கார்டை, பான் கார்டுடன் இணைக்காமல் இருப்பவர்கள், 2023, மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். 

இந்த காலக்கட்டத்துக்குள் பான், ஆதார் கார்டை இணைக்காமல் இருந்தால் 2023, ஏப்ரல் 1ம் தேதி முதல் இணைக்காமல் இருப்பவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும்” இவ்வாறு வருமானவரித்துறை ட்விட்டரில் இதை நினைவூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருமானவரித்துறை பலமுறை அவகாசம் அளித்து, அவகாசமும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அந்த அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்துவிட்டது.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிர்மலா சீதாராமன் 5-வதுமுறையாக இடம் பிடித்தார்

மத்தியநேரடி வரிகள் வாரியம் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, “ 2022, மார்ச்31ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான்கார்டைஇணைக்காமல் இருப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதேசமயம், அபராதத்தைச் செலுத்தினால், அந்த பான்கார்டை 2023ம் ஆம் ஆண்டுவரை பயன்படுத்தவும் அனுமதித்தது” எனத் தெரிவித்தது.

Scroll to load tweet…

அனைத்து விதமான பணப்பரிமாற்றத்துக்கும் தற்போது பான்கார்டு அவசியமாகியுள்ளது, வங்கிக்கணக்கு, பணத்தை டெபாசிட் செய்தல், டீமேட் கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல், விற்றல் அனைத்துக்கும் பான்கார்டு கட்டாயமாகியுள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள், பான் கார்டை ஆதாருடன் இணைக்கத் தவறும்பட்சத்தில் பான்கார்டு செயலிழந்து, செல்லாததாகிவிடும். அதன்பின் மேற்குறிப்பிட்ட எந்தச் சேவையையும் பயன்படுத்துவது இயலாது.

வருமானவரித்துறை இணையதளத்தில்(www.incometax.gov.in) சென்று வருமானவரிச் சட்டம் பிரிவு 234ஹெச்ன்படி ஒருவர் ஆதார், பான்கார்டு இணைக்க ரூ.1000 அபராதமாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தியபின்புதான், மீண்டும் ஆதார், பான் கார்டை இணைக்க முடியும். அதேசமயம், ஆதாருடன், பான் கார்டை இணைத்துவிட்டால், செயலிழந்துவிட்ட பான்கார்டு மீண்டும் செயல்பாட்டு வந்துவிடும்.

விலைவாசி உயர்வு இப்போதைக்கு குறையாது! ரிசர்வ் வங்கி சூசகம்

ஆதார்-பான் கார்டை இணைப்பது எப்படி?

1. ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்

2. அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்

6. இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்