Asianet News TamilAsianet News Tamil

RBI MPC Meet 2022: Inflation:விலைவாசி உயர்வு இப்போதைக்கு குறையாது! ரிசர்வ் வங்கி சூசகம்

நாட்டில் விலைவாசி உயர்வு இப்போதைக்கு குறையாது, அடுத்த ஆண்டுவரை நீடிக்கும் என்பதை ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சூசகமாகத் தெரிவித்தார்

The RBI expects inflation to fall below 6% by March 2023.
Author
First Published Dec 7, 2022, 2:13 PM IST

நாட்டில் விலைவாசி உயர்வு இப்போதைக்கு குறையாது, அடுத்த ஆண்டுவரை நீடிக்கும் என்பதை ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சூசகமாகத் தெரிவித்தார்

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் கடந்த 5ம்தேதி முதல் 7ம் தேதிவரை நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று வெளியிட்டார். இதில் குறுகியக் காலக்கடனுக்கான வட்டியை மேலும் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வட்டிவீதம 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

The RBI expects inflation to fall below 6% by March 2023.

இந்த வட்டி உயர்வால், வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கியர்கள் அதிகமான தொகையை வட்டி செலுத்தவேண்டியதிருக்கும். ஆதலால், மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ அளவு அதிகரி்க்கும், சேமிப்பு குறையும்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி 6 ஆண்டுகளாக உயர்கிறது! நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டில் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. நாட்டின் பணவீக்கம் மீது அர்ஜூனன் போல் கவனம்செலுத்திவருகிறது ரிசர்வ் வங்கி. பணவீக்கத்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நாட்டின் விலை வாசியை சமாளிக்க வேகமான, நெகிழ்த்தன்மையான செயல்பாடுகள் தேவை.

உலகளவிலான கமாடிட்டிகளான கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ஆனால் இந்த விலைக் குறைவும் நிலையற்றது, எப்போதுவேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழலில்தான் இருக்கிறது. அதேநேரம் உள்நாட்டில் பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதும் விலைவாசி உயர்வுக்கு காரணமாகும். 

The RBI expects inflation to fall below 6% by March 2023.

ஏற்ற, இறக்கத்தில் தங்கம்! போக்குகாட்டும் விலைவாசி! இன்றைய நிலவரம் என்ன?

இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சராசரி விலை பேரல் 100 டாலர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணவீக்கத்தை மதிப்பிட்டுள்ளோம். இதன்படி நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதம் அளவில் சராசரியாக நீடிக்கும். இது ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட அதிகம்தான். 

அக்டோபர் டிசம்பர் மாதங்களில் பணவீகக்ம் 6.6 சதவீதமாகவும், ஜனவரி மார்ச் மாதத்தில் 5.9 சதவீதமாகவும் இருக்கும்.ஆனால் பணவீக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து அதைக் குறைக்க அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்து  வருகிறோம். பணவீக்கம் ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் 2023 மார்ச் மாதம்தான் வரும் என்று கணித்துள்ளோம்

The RBI expects inflation to fall below 6% by March 2023.

RBI Monetary Policy Meet 2022:ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்! ஓர் பார்வை

இவ்வாறு சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.

ஆதலால், விலைவாசி உயர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை குறைந்து பழைய நிலைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 6 சதவீதத்துக்குள் பணவீக்கம் வந்தால்தான் அது முந்தைய நிலைக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகும். ஆதலால், அடுத்த 3 மாதங்களுக்கு விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க இயலாதது.

Follow Us:
Download App:
  • android
  • ios