இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 63,588 புள்ளிகளை தொட்டு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கிய சில மணி நேரங்களில் சென்செக்ஸ் உச்சத்திற்கு சென்றது. அதாவது சென்செக்ஸ் 63,588 புள்ளிகளை தொட்டது. அதேசமயம் 50 பங்குகளைக் கொண்ட நிப்டி 12 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டது. நிதி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. அதேசமயம் மருந்து நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த பங்குகளின் மதிப்பு குறைந்து காணப்பட்டது. நிஃப்டி 18,887.60 என்ற உச்சத்தில் இருந்து சிறிது நேரத்தில்18,870 புள்ளிகளில் வர்த்தகமானது.
சென்செக்ஸ் பங்குகளில் அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்&டி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பிரமல் எண்டர்பிரைசஸ் 10% உயர்வுடன் துவங்கியது. ஏனெனில் பிரமல் எண்டர்பிரைசஸ் பிளாக் டீல் முறையில் பங்குகளை விற்க முன் வந்தது.
பிளாக் டீல் என்பது பங்குகள் அல்லது பத்திரங்களின் ஒரு பெரிய பரிவர்த்தனை ஆகும். இது பங்கு வர்த்தகத்திற்கு வெளியே இரு தரப்பினருக்கு இடையில் நடைபெறுவதாகும். பொதுவாக பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் மூலம் இது நடைபெறும்.
ரயில் விகாஸ் நிகாம் (ஆர்விஎன்எல்) பங்குகள் 4% உயர்ந்தன. நிஃப்டி வர்த்தகத்தில் ஆட்டோ சார்ந்த பங்குகளின் மதிப்பு 0.61%மும், நிதி சார்ந்த பங்குகளின் மதிப்பு 0.51%மும் உயர்ந்து காணப்பட்டன. வங்கிகள், எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா, ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளும் லாபத்துடன் துவங்கின. நிஃப்டி மிட்கேப்பில் 100 பங்குகள் 1.01% உயர்ந்து காணப்பட்டது. நிஃப்டி ஸ்மால்கேப்பில் 100 பங்குகளின் மதிப்பு 0.68% உயர்ந்து காணப்பட்டது.
ஓய்வூதியத்திற்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..
இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு மாதங்களாக, குறிப்பாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகின்றன. வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக, வலுவான வருவாய், சிறந்து விளங்கி வரும் வங்கித் துறை, பல்வேறு துறைகளில் வலுவான தேவை, ஆகியவற்றால் இன்று இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு இருக்கிறது. மேலும் நிப்டி மிட் கேப் பங்குகளின் வர்த்தம் நன்றாக இருந்ததால் பொதுவாக இன்று வர்த்தகம் உயர்ந்து காணப்பட்டது என்று கூறப்படுகிறது.
