இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி மந்தநிலையில் உள்ளன.

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி மந்தநிலையில் உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமெரிக்கப் பொருளாதாரத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜனவரி மாதத்தில் வேலைநிலவரம் அமெரிக்கப் பொருளாதாரம் கடும்நெருக்கடியில் இருப்பது தெரியவருகிறது. இதனால் அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டங்களில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை குறைந்தபட்சம் 25 புள்ளிகள் உயர்த்தவே வாய்ப்புள்ளது. 

பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்ன?! சென்செக்ஸ், நிப்டி சரிவு ! Adani Ports மீண்டது

இந்த தகவலால் பங்கு, கடன்பத்திரங்கள் மதிப்புமீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கும்போக்கும அதிகரித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்ட முடிவு நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 25 புள்ளிகள் அளவு வட்டியை உயர்த்தலாம் எனத் தெரிகிறது. இந்த நிலவரத்தையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வர்த்தகத்தில்ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் காலை வர்தத்கம் தொடங்கியதில் இருந்து பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக நடந்துவருகிறது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் குறைந்து, 60,387 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குசந்தையில் நிப்டி 28 புள்ளிகள் குறைந்து, 17,735 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி மந்தம்! அதானி பங்கு வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன, 18 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், ட்விஸ்லேப்ஸ, டாக்டர்ரெட்டீஸ்,இன்டஸ்இன்ட்வங்கி, கிராஸிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

நிப்டி துறையில் வங்கி, எரிசக்தி, கட்டுமானம், ஐடி,பொதுத்துறை வங்கி பங்குகள் லாபத்தில் உள்ளன. ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, மருந்துத்துறை, உலோகம் ஆகிய துறைப் பங்குகள் சரிவில் உள்ளன