சர்வதேச காரணிகள், உக்ரைன்-ரஷ்யா பதற்றம் ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் முதலீட்டில் ஆர்வம் காட்டாததால், பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தது. இரு நாட்களும் பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்கியிருக்கிறது.

சர்வதேச காரணிகள், உக்ரைன்-ரஷ்யா பதற்றம் ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் முதலீட்டில் ஆர்வம் காட்டாததால், பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தது. இரு நாட்களும் பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்கியிருக்கிறது.

பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன்தான் தொடங்கியது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் இடையே பதற்றம் குறையவில்லை, எப்போதுவேண்டுமானாலும் ரஷ்யா படையெடுக்கும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கை முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஏற்றத்துடன் இருந்த பங்குச்சந்தை சரிவை நோக்கிச் சென்றது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்கத் தொடங்கியதால் புள்ளிகள் மளமளவென வீழ்ந்தன.

வர்த்தகம் முடிவில், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 104.67 புள்ளிகள் சரிந்து, 57,635 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 58,346 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது

தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் வர்த்தகம் முடிவில் 17.60 புள்ளிகள் வீழ்ந்து, 17,235 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 17,442 புள்ளிகள் வரை உயர்ந்தது. கடந்த இரு நாட்களில்மட்டும் பிஎஸ்இ 700 புள்ளிகளையும், என்எஸ்இ 200 புள்ளிகளையும் இழந்துள்ளது.
ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபமடைந்தன, அதைத்தொடர்ந்து ஹெச்டிஎப்சி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஐடிசி, டெக்மகிந்திரா ஆகியவை லாமடைந்தன.

ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, கோடக் வங்கி, சன் ஃபார்மா ஆகியநிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

ஜியோஜித் பைனான்சியல் சர்வீஸ் லிமிட் தலைமை ஆய்வாளர் வினோத் நாயர் கூறுகையில் “ ரஷ்யா, உக்ரைன் இடையிலான புவிஅரசியல் சூழல், உறுதியற்ற சூழல் காரணமாக உள்நாட்டு பங்குச்சந்தையிலும் நிலையற்ற தன்மை நிலவுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டிவீதம் உயர்த்துவது குறித்து தெளிவான அறிவிப்பு செய்யவில்லை. இந்த உறுதியற்ற சூழலில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்