Asianet News TamilAsianet News Tamil

சில நிமிடங்களில் ரூ. 6 லட்சம் கோடி நஷ்டம்;பாதாளத்தில் மும்பை பங்குச்சந்தை: இதுதான் காரணமா?

மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் தொடக்கமே அதிர்ச்சிதரக்கூடிய வகையில் இருந்தது. வர்த்தகம் தொடங்கியதும் 1400  புள்ளிகள் சரிந்தன, தேசியப்பங்குசந்தையான நிப்டியில் 317 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

Sensex down 1,050 points, Nifty near 17,050; VIX index soars 14%
Author
Mumbai, First Published Feb 14, 2022, 11:34 AM IST

மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் தொடக்கமே அதிர்ச்சிதரக்கூடிய வகையில் இருந்தது. வர்த்தகம் தொடங்கியதும் 1400  புள்ளிகள் சரிந்தன, தேசியப்பங்குசந்தையான நிப்டியில் 317 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தையில் கடந்த வாரம் ஏற்றமும், இறக்கமும் கலந்தவாறு இருந்தது. ஆனால், இன்று வாரத்தின் முதல்நாளே பெருத்த அடியாக இருந்தது.

Sensex down 1,050 points, Nifty near 17,050; VIX index soars 14%

என்ன காரணம்

சர்வதேச காரணிகள், ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரம் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம், கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்வு போன்றவை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் ஆட்டம் காணச் செய்தன. 

ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெயை ரஷ்யாதான் சப்ளை செய்து வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ரஷ்யா 5 % கையில் வைத்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அது கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும், இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு வரும் என்பதால், முதலீ்ட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததை திரும்பப் பெற்றனர்.

Sensex down 1,050 points, Nifty near 17,050; VIX index soars 14%

உக்ரைன் நேட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்து, எல்லையில் படைகளைக் குவித்ததும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காகுதித்ததும் சர்வதேச பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

ஏற்கெனவே கச்சா எண்ணெய் ஒரு பேரல்கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு 94 டாலராக உயர்ந்துவிட்டது. இந்த சூழலில் போர் ஏதேனும் ஏற்பட்டால் வரலாறு காணதஅளவில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும்.

இந்த அச்சத்தால் மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கி முதலீட்டை திரும்பப் பெற்றனர். இதனால் பங்குகளை வாங்குவதைவிட விற்பதில் ஆர்வம்காட்டியதால் சென்செக்ஸ்புள்ளிகள் மளமளவென சரிந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர் 1050 புள்ளிகளுக்கு வந்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 377 புள்ளிகள் வரை சரிந்தது

Sensex down 1,050 points, Nifty near 17,050; VIX index soars 14%

பொதுத்துறை வங்கிகளின் பங்குகள், வங்கித்துறை, நிதிச்சேவை, உலோகம், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை பங்குகள் பெருத்த அடிவாங்கின

கடந்த வெள்ளிக்கிழமை வர்தத்கம் முடியும்போது முதலீட்டாளர்களி்ன் சொத்துமதிப்பு ரூ.263.90 லட்சம் கோடியாக இருந்தது. இன்று காலை ஏற்பட்ட சரிவால், ரூ.6.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு, ரூ.257.20 லட்சம் கோடியாக சொத்துமதிப்பு குறைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், ஒஎன்ஜிசி பங்குகள் விலை கடந்த 32 மாதங்களில் இல்லாத அளவு விலை உயர்ந்தது. முதலீட்டாலர்கள் எண்ணெய் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால், விலை உயர்ந்தது


 

Follow Us:
Download App:
  • android
  • ios