பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பங்குசந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் எழுச்சி மற்றும் புதிய வெளிநாட்டு நிதி வரவுகளுக்கு மத்தியில், புதன்கிழமை நடைபெற்ற பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 64,000 புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. நிஃப்டியும் முதல் முறையாக 19,000 ஐ எட்டியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பங்குகளை வாங்க அதிக முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதும் இந்த வளர்ச்சிக்கு உதவியது. பிற்பகல் வர்த்தகத்தின் போது பிஎஸ்இ சென்செக்ஸ் 621.07 புள்ளிகள் உயர்ந்து 64,037.10 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. என்எஸ்இ நிஃப்டி 193.85 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 19,011.25 ஐ எட்டியது.
பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 945.42 புள்ளிகள் (1.50 சதவீதம்) உயர்ந்து 63,915.42 இல் முடிவுற்றது. நிஃப்டி 280.90 புள்ளிகள் (1.50 சதவீதம்) அதிகரித்து 18,972.10 இல் முடிந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பங்குசந்தைக்கு நாளை விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் வர்த்தகத்தில் என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், டைட்டன், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன. விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பின்தங்கியுள்ளன.
டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் இந்திய பங்குச்சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. ஐரோப்பிய சந்தைகளும் வர்த்தகத்தில் நேர்மறையான போக்கில் உள்ளன. செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் கணிசமாக உயர்ந்தன.
நிலவுக்குச் செல்லும் சந்திரயான் 3! ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ அறிவிப்பு

அந்திய முதலீடுகள் அதிகரித்ததும் பங்குச்சந்தை முன்னேற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாயன்று ₹ 2,024.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். உலகளாவிய எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 0.08 சதவீதம் உயர்ந்து 72.32 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக நேர முடிவில் பிஎஸ்இ சென்செக்ஸ் 446.03 புள்ளிகள் அல்லது 0.71 சதவீதம் உயர்ந்து 63,416.03 ஆக இருந்தது. நிஃப்டி 126.20 புள்ளிகள் அல்லது 0.68 சதவீதம் உயர்ந்து 18,817.40ல் முடிந்தது.
