Share Market Today: அதானிக்கு ஜாக்பாட் ! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி சிறிதளவு ஏற்றம்
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. அதானி என்டர்பிரைசஸ் FPO பங்குகள் அனைத்தும் விற்று தீர்ந்தது அதானிக்கு பெரிய ஜாக்பாட்டாகும்.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தன. அதானி என்டர்பிரைசஸ் FPO பங்குகள் அனைத்தும் விற்று தீர்ந்தது அதானிக்கு பெரிய ஜாக்பாட்டாகும்.
பிப்ரவரி 1ம்தேதி நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, , அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த இரு பெரும் அம்சங்களை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்?
நாடாளுமன்றத்தில் இன்று பொருளதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் முதலீட்டாளர்களை பெரிதாகக் கவரவில்லை. கடந்த இரு ஆண்டுகளைவிட வரும் நிதியாண்டில் பொருளாதாரவளர்ச்சி குறையும் என்ற ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனே வர்த்தகத்தில் ஈடுபட்டதால், காலை முதலே சரிவு காணப்பட்டது. ஆனால், பிற்பகலுக்குப்பின் பங்குசந்தை சரிவிலிருந்து மீண்டு உயர்வுடன் முடிந்தது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து, 59,549 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 13 புள்ளிகள் அதிகரித்து, 17,662 புள்ளிகளில் நிலைபெற்றது.
பொருளாதார ஆய்வறிக்கை எப்படி இருக்கும்? 2023ல் ஜிடிபி 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதானி என்டர்பிரைசஸ் எப்இஓ விற்பனை முழுவதும் நடந்தது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு இன்றும் 1.73% வளர்ச்சி அடைந்தன. முதலீட்டாளர்கள் நாளை தாக்கலாகும் பொது பட்ஜெட், அதில் தொழில்நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அந்நிய முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 17 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 13 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, பவர்கிரிட், ஐடிசி, டைட்டன், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, மாருதி, டாடா ஸ்டீல், கோடக்வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், எச்யுஎல் பங்குகள் விலை உயர்ந்தன.
நிப்டியில் மகிந்திரா அன்ட் மகிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி போர்ட், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் அதிகபட்சமாக லாபமடைந்தன. பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், டெக் மகிந்திரா, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா ஆகிய பங்குகள் விலை சரிந்தன.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்
நிப்டியில் ஐடி, மருந்துத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளின் பங்குகளைத் தவிர, அனைத்து துறைகளும் லாபத்தில் முடிந்தன
- BSE
- Investors
- NSE
- Sensex
- bse
- market news today
- market today live
- nifty
- share market news
- share market news today
- share market sensex today share market today open
- share market today
- share market today live
- share market today price
- sharemarket live
- sharemarket update
- stock market
- stock market today
- stockmarket update
- stockmarketlive
- today share market live
- today share market news
- today share market open
- today stock market. Nifty today