Russia-Ukraine war:  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரஷ்ய நிறுவனங்களுடன் பரிவரித்தனையை நிறுத்விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரஷ்ய நிறுவனங்களுடன் பரிவரித்தனையை நிறுத்விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தடைவிதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்கள், வங்கிகளுடன் ஸ்டேட் வங்கி ஏதேனும் பரிமாற்றம் செய்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தங்களுக்கும் விதிக்கப்படலாம் என்று எஸ்பிஐ வங்கி தங்களின் கிளைகளுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகளின் தடை பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகங்கள் அல்லது கப்பல்கள் தொடர்பாக எந்த கரன்சி பரிவர்த்தனையும் செயல்படுத்தக்கூடாது என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. தடைப்பட்டியலில் இருக்கும் நிறுவனங்களுக்கு பேமெண்ட் நிலுவை இருந்தால் வங்கி செயல்பாட்டுமுறை அந்தத் தொகையை வழங்காமல் வேறு வழியில் அதை வழங்க முயற்சிக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்பிஐ வங்கியின் இந்த சுற்றறிக்கை குறித்து தகவல் அறிய செய்தி நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியபோது அதற்கு பதில் ஏதும் இல்லை.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கமர்ஷியல் இன்டோ வங்கியுடன், எஸ்பிஐ வங்கி கூட்டுவைத்து செயல்படுகிறது. மற்றொரு வங்கியுடன் 40 சதவீத பங்குகளுடன் கனரா வங்கி செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும், ரஷ்யாவும் நீண்டகால நட்பு நாடுகள். பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் பெரும்பாலனவற்றை இந்தியாவுக்கு ரஷ்யா சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நிறுவனங்களின் பரிமாற்றத்துக்கு எஸ்பிஐ தடைவிதித்துள்ளதாக வந்துள்ள செய்தி வியப்பளிக்கிறது.
நடப்பு நிதியாண்டில் இந்தியா, ரஷ்யா இடையே 9400 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில், 8100 கோடி டாலருக்குத்தான் இருநாட்டு வர்த்தகம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது

ரஷ்யாவிலிருந்து பிரதானமாக எரிபொருள், தாதுஎண்ணெய், முத்துகள், விலை உயர்ந்த கற்கள், அணுஉலை ரியாக்டர்ஸ், பாய்லர்ஸ், எந்திரங்கள், மின்னணு சாதனங்கள், உரங்களை இந்தியாஇறக்குமதி செய்கிறது.

இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், இயற்கை ரசாயனம், வாகனங்கள், தேயிலை ஏற்றுமதியாகின்றன. 
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரி்ட்டன் என வரிசையாக பல்வேறு தடைகளைவிதித்துள்ளன. 

வான் வெளிகளை மூடுதல், ரஷ்ய வங்கிகள் ஸ்விப்ஃட் வங்கி பணப்பரிமாற்ற சேவையை பயன்படுத்தவிடாமல் தடுத்தல், அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிளின் வரலாற்று சரிவு, ரஷ்ய மத்திய வங்கியுடன் பரிமாற்றத்துக்கு அமெரிக்காவின் தடை போன்றவை ரஷ்யாவுக்கு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்

ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட இந்த பொருளாதார, நிதித்தடைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சிக்கலாக மாறும் என்பதாலும், ரஷ்யாவை பழிவாங்கவும் பல நிறுவனங்கள் அந்நாட்டை விட்டுவெளியேறும் முடிவையும் எடுத்துள்ளன.