ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தேர்தல் பத்திர விவரத்தை வெளியிட மறுக்கும் எஸ்பிஐ!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் தேர்தல் ஆணையத்திற்கு டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடக் எஸ்பிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

SBI Refuses to Disclose Electoral Bonds' Details Under RTI Act sgb

அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, வெளிப்படைத்தன்மை இல்லாத்து என கூறிய உச்ச நீதிமன்றம் கூறியது. ஏப்ரல் 12, 2019 முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு மார்ச் 13ஆம் தேதிக்குள் வழங்குமாறும் பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எஸ்பிஐக்கு உத்தரவிட்டது.

மார்ச் 11 அன்று, காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய எஸ்பிஐயின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மார்ச் 12ஆம் தேதி வணிக நேரம் முடிவதற்குள் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், "நீங்கள் கோரும் தகவல்களில் வாங்குபவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்கள் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 8(1)(e) மற்றும் (j) ஆகியவற்றின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளால், இந்த விவரங்களை வெளியிட முடியாது." என்று எஸ்.பி.ஐ. கூறியுள்ளாது.

பெண் குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் காப்பீட்டு! பெற்றோர் செய்யவேண்டியது இதுதான்!

SBI Refuses to Disclose Electoral Bonds' Details Under RTI Act sgb

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்திற்கு டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடக் கோரிய ஆர்டிஐ ஆர்வலரும் ஓய்வு பெற்ற கமடோருமான லோகேஷ் பத்ராவின் மனுவுக்கு அளித்த பதிலில் எஸ்பிஐ இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய லோகேஷ் பத்ரா, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே உள்ள தகவல்களை தர மறுக்கப்பட்டது வினோதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மார்ச் 14 அன்று தனது இணையதளத்தில் எஸ்பிஐ வழங்கிய தரவுகளை வெளியிட்டது. அதில், கட்சிகளுக்கு பணம் வழங்கிய நன்கொடையாளர்கள் மற்றும் அந்தப் பத்திரங்களைப் பணமாக்கிக்கொண்ட அரசியல் கட்சிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டன.

மார்ச் 15 அன்று, உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் உரிய சீரியல் எண்களை வழங்காத ஏன் ஏன்று கடுமையாகக் கண்டித்து, மொத்த விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டது. பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்கள், பத்திரத்தின் மதிப்பு, வாங்கிய தேதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கியுள்ளன என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

காசோலையின் பின்புறம் கையெழுத்து போடுவது ஏன் தெரியுமா? செக்கை பணமாக மாற்ற இது அவசியம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios