Asianet News TamilAsianet News Tamil

பெண் குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் காப்பீட்டு! பெற்றோர் செய்யவேண்டியது இதுதான்!

25 வருட பாலிசி எடுத்து ரூ.41,367 ஆண்டு பிரீமியம் செலுத்தினால், மாதாந்திர பிரீமியம் தொகை ரூ.3,447 ஆக இருக்கும். இந்த பாலிசி மூலம் 2 வழிகளில் வரிச் சலுகை பெறலாம்.

Introducing LIC Kanyadan Policy: Safeguarding Daughters' Future with Exclusive Benefits sgb
Author
First Published Apr 11, 2024, 8:20 PM IST

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பலவிதமான பாலிசிகளை வழங்குகிறது. பெண் குழந்தைகளின் நலன் கருதி எல்ஐசி கன்யாடன் பாலிசியை அளித்து வருகிறது. இத்திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் ஒரு வயது முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

13 முதல் 25 ஆண்டுகள் வரை பாலிசி காலம் உள்ளது. பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் செலுத்த வசதி இருக்கிறது. 25 வருட பாலிசியை தேர்வு செய்தால், 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். இந்த பாலிசியை எடுக்க, பெண்ணின் தந்தை 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பாலிசியை எடுத்த 3ஆம் ஆண்டிலிருந்து கடன் வசதியும் கிடைக்கும். 2 ஆண்டுகள் கழித்து பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், அந்த வசதியும் உள்ளது. ஒரு மாதத்தில் பிரீமியம் செலுத்தாவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் அபராதம் இல்லாமல் பிரீமியத்தை செலுத்த முடியும்.

இந்த பாலிசி மூலம் 2 வழிகளில் வரிச் சலுகை பெறலாம். சட்டப்பிரிவு 80C, சட்டப்பிரிவு 10D ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறத. அதிகபட்ச வரம்பு இல்லை.

25 வருட பாலிசி எடுத்து ரூ.41,367 ஆண்டு பிரீமியம் செலுத்தினால், மாதாந்திர பிரீமியம் தொகை ரூ.3,447 ஆக இருக்கும். 22 ஆண்டுகளுக்கு இவ்வாறு முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை கிடைக்கும்.

பாலிசி எடுத்திருக்கும்போது தந்தை இறந்துபோனால், அடுத்த வரும் காலத்திற்கு அவரது பெண் பிரீமியம் செலுத்த வேண்டாம். பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். இது தவிர, 25 ஆண்டுகள் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.1 லட்சமும், 25ஆம் ஆண்டு முதிர்வுத் தொகையும் வழங்கப்படும். சாலை விபத்தில் தந்தை இறந்தால், நாமினிக்கு விபத்து மரணத்திற்கான பலனாக ரூ.10 லட்சம் கொடுக்கப்படும். 

Follow Us:
Download App:
  • android
  • ios