SBI Recruitment 2022 :நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கிறது. சேனல் மேனேஜர் பதவிக்காக 641 பேரை வேலைக்கு எடுக்க எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கிறது. சேனல் மேனேஜர் பதவிக்காக 641 பேரை வேலைக்கு எடுக்க எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேனல் மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஜூன் 7ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers என்ற இணையதள முகவரியில் சென்று அனுப்ப வேண்டும்.

எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள 641 காலியிடங்களில் 503 காலியிடம் சேனல் மேனேஜர் ஃபெசிலிட்டர் பதவியாகும். சேனல் மேனேஜர் சூப்பரவைசர் பதவிக்கு 130 பேர் எடுக்கப்பட உள்ளனர். சப்போர்ட் ஆபிஸர் பணியிடத்துக்கு 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயதுத் தகுதி

சேனல் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பவர்களுக்கு வயது 60 முதல் 63 வயது இருக்க வேண்டும். எஸ்பிஐ வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர், அல்லது இ-ஏபிஎஸ் அந்தஸ்திலும், பிற பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்தவர்களும் சேனல் மேனேஜர் பதவி உள்பட 3 பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த 3 பதவிக்கும் ஏடிஎம் செயல்பாட்டில் அனுபவம மிகுந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் வரவேற்கப்படுகிறார்கள்

தேர்வு முறை:

சேனல் மேனேஜர் உள்ளிட்ட 3 பணியிடங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவோர், தகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் பணியில் அமர்த்தப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் 100 மதிப்பெண் வழங்கப்பட்டு அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பம் செய்வது

  1. எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
  2. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான-எனிடைம் சேனல் டிபார்ட்மென்ட் பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அனைத்து விவரங்களையும் பதிவு செய்து, லாகின் செய்யய வேண்டும்
  4. தேவையான விவரங்களைப் பதவி செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  5. · ஆணங்களைப் பதிவேற்றம்செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சேமித்து தகவலுக்காக சேமித்துக்கொள்ள வேண்டும்.

ஊதியம் 

சேனல் மேனேஜர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.36ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்
சேனல் மேனேஜர் சூப்ரவைசர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.41ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படும். 
சப்போர்ட் ஆபிஸர் பதவிக்கு தேர்வாகும் நபருக்கு ரூ.41ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்