சங்கீதா புதிய Price Challenge திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் விலை குறைவுக்கு ₹10,000 வரை கேஷ்பேக் மற்றும் சேத பாதுகாப்பையும் பெறலாம். இது இந்திய மொபைல் சில்லறை விற்பனையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது.

சங்கீதா இந்தியாவின் உச்சகட்ட Price Challenge (விலை சவால்) திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ஈடு இணையற்ற மதிப்பு, நிகரற்ற பாதுகாப்பு ஆகியவற்றுடன், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்கினாலும் சரி அல்லது எந்த சங்கீதா ஷோரூமில் வாங்கினாலும் சரி, எதிர்கால விலை மாற்றங்களுக்கும் திடீர் சேதங்களுக்கும் முழுமையான நிம்மதியுடன் இருக்கலாம்.

இந்த Price Challenge திட்டம் இந்திய மொபைல் சில்லறை விற்பனையில் சங்கீதாவை முன்னோடியாக நிலைநிறுத்துகிறது.

சங்கீதாவின் விலை சவால் ஏன் தனித்துவமானது?

விலைக் குறைவுக்கு பின் ₹10,000 வரை கேஷ்பேக்

சங்கீதாவில் வாங்கிய மொபைலின் விலை 30 நாட்களில் குறைந்தால், வாடிக்கையாளர்கள் ₹10,000 வரை கேஷ்பேக் பெறுவார்கள். இது இந்தியாவில் முதல்முறையாக இலவசமாக வழங்கப்படும் விலை பாதுகாப்பு. (குறிப்பு: இது தள்ளுபடி அல்ல, கேஷ்பேக் தான்.)

சேத பாதுகாப்பு

உங்கள் மொபைல் தவறுதலாக சேதமடைந்தால், சங்கீதா ஷோரூமில் அடுத்த மொபைலுக்கு 70% தள்ளுபடி பெறலாம். வாடிக்கையாளர்களின் நிம்மதியான அனுபவத்திற்கும் தொடர்ந்த இணைப்புக்கும் இது உதவுகிறது.

சுபாஷ் சந்திரா, சங்கீதா

“ஒவ்வொரு வாடிக்கையாளரும் மொபைல் வாங்கும்போது முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,” என்கிறார் சங்கீதா நிர்வாக இயக்குநர் திரு. சுபாஷ் சந்திரா. “விலை குறைந்தால் பணத்தைத் திருப்பித் தருவோம். அதோடு, சேதமானாலும் புதிய மொபைலுக்கு பெரிய தள்ளுபடி வழங்குகிறோம். நலனையே முன்னிலைப்படுத்துகிறோம் என்று கூறினார்.

சங்கீதா

1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கீதா இன்று இந்தியாவின் முன்னணி மல்டி-பிரான்ட் மொபைல் ரீட்டெய்லர்களில் ஒன்றாக விளங்குகிறது. பெங்களூர் மாநில தலைமையகம் கொண்ட சங்கீதா, தற்போது 10 இடங்களில் 800-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை நடத்தி வருகிறார். 2 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேலாக சேவை வழங்கப்படுகிறது. 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நம்பிக்கையும் புதுமையும் நிரம்பிய சேவையை வழங்கும் சங்கீதா, இந்திய மொபைல் சந்தையில் முன்னணி ரீட்டெய்லராக விளங்குகிறது.