அதிகரிக்கும் சொகுசு வீடு ஆசை... ஆடம்பர வீடுகள் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு!
அதிக சொத்துகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பான பலனளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆடம்பர வீடுகள் மீதான ஈர்ப்பு கூடியிருக்கிறது எனவும் CBRE சுட்டிக்காட்டுகிறது.
2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொகுசு வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டைவிட 97 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரியல் எஸ்டேட் நிறுவனமான CBRE வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மொத்த சொகுசு வீடுகள் விற்பனையில் 90 சதவீத பங்கு உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. மொத்த விற்பனையில் 37 சதவீதம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ளது. மும்பையில் 35 சதவீதமும், ஹைதராபாத் 18 சதவீதமும் விற்பனையாகியுள்ளன. புனேயில் 4 சதவீதம் விற்பனை நடந்துள்ளது.
வலுவான பொருளாதாரம், பெருகிவரும் வருமானம், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கான அபிலாஷை மற்றும் முக்கிய பெருநகரங்களில் ஆடம்பர குடியிருப்புகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகள் ஆடம்பர வீடுகள் விற்பனை அதிகரிப்புக் காரணமாக உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
அதிகாரியை மிரட்டிய துரைமுருகனின் உதவியாளர்! மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை பரபரப்புத் தகவல்
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பண்டிகைக் காலத்தில் ஆடம்பர வீடுகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக சொகுசு வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தக் காலாண்டில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
"இந்த விற்பனை அதிகரிப்புக்கு முதன்மைக் காரணம், வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் ஆகும். ஸ்மார்ட் ஸ்விட்சுகள் மூலம் வீட்டு வசதிகளைக் கட்டுப்படுத்துதல், தொலைபேசியில் ஒரு கிளிக் மூலம் கையாளும் வசதிகள் போன்ற நவீனத் தொழில்நுட்ப அம்சங்கள் ஆடம்பர வீடுகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. கோரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் பெரிய இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதும் ஒரு காரணம்” அறிக்பையில் என்று சொல்லப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி, சாதகமான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் வளர்ந்துவரும் வாழ்க்கை முறை விருப்பங்கள் ஆகியவை ஆடம்பரக் குடியிருப்பு விற்பனை அதிகரிப்புக்கு பிற முக்கியக் காரணங்கள். பிரீமியம் மற்றும் சொகுசு வீடுகள் விற்பனை 2023ஆம் ஆண்டில் 10 வருடங்களில் அதிகபட்ச உயர்வை எட்டும் என அறிக்கை கூறுகிறது.
அதிக சொத்துகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பான பலனளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆடம்பர வீடுகள் மீதான ஈர்ப்பு கூடியிருக்கிறது எனவும் CBRE சுட்டிக்காட்டுகிறது. இந்த போக்கு ஆடம்பர வீடுகள் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் முக்கிய பகுதியாக மாறி வருவதைக் காட்டுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற லெவல் ரேஞ்ச் கொடுக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார்! ஆயிரத்தைத் தாண்டிய புக்கிங் எண்ணிக்கை!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D