Russia-Ukraine War:உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரால் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக உரங்கள் தயாரிக்கப்பயன்படும் பொட்டாஷ் விலை உயரக்கூடும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரால் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக உரங்கள் தயாரிக்கப்பயன்படும் பொட்டாஷ் விலை உயரக்கூடும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து எந்தப் பொருட்களையும் இறக்கமதி செய்யாமல்,அந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்க முடிவெடுத்துள்ளனர்.

உக்ரைன் மீது நடத்தியதாக்குதலில் அந்நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. அந்த நகரங்கள் மீண்டும் மறுஉருவாக்கம் செய்து,இயல்பு நிலைக்கு கொண்டுவர ஆண்டுகள் ஆகலாம். இதனால் உக்ரைனிலிருந்து ஏற்றுமதிக்கான வாய்ப்பும் குறைவு.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை உரங்களின் மூலப்பொருளான பொட்டாஷ் பெலாராஸ், ரஷ்யாவிலிருந்துதான் அதிகமாக வாங்குகிறது. உலகிற்கே முக்கிய சப்ளையர்களாக ரஷ்யாவும், பெலாரஸ்நாடும் இருக்கின்றன.

இதில் உக்ரைன், ரஷ்யா, பெலாரஷ் ஆகிய நாடுகள் சேர்ந்து இந்தியாவின் பொட்டாஷ் இறக்குமதியில் 12 சதவீதத்தை நிறைவு செய்கின்றன. இதற்கு முன் ரஷ்ய துறைமுகங்கள் வாயிலாக பெலாரஸிலிருந்து பொட்டாஷை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. தற்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது

கனடாவில் பொட்டாஷ் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும் சூழலின் தேவை கருதி உற்பத்தியை அதிகப்படுத்த கனடா அரசும் மறுத்துவிட்டது. இதனால், பொட்டாஷ் சப்ளையில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இறக்குமதி செலவு மெட்ரிக் டன்னுக்கு 500 முதல் 600 டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ஒருமெட்ரிக் டன்னுக்கு 280 டாலராகத்தான் இருக்கிறது.

உரத்தின் விலை அதிகரிக்கும்நிலையில், அதைக் கட்டுப்படுத்த மத்திய அ ரசும் மானியத்தை வழங்கிய வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பட்ஜெட்டில் உரத்துக்காக ஒதுக்கப்பட்ட மானிய அளவைவிட அதிகமாக ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்படும்.

ஐசிஆர்ஏ ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு தலைவர் ரோஹித் அஹுஜா கூறுகையில் “ பெலாரஸ், ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டதால், உலகச் சந்தையில் பொட்டாஷ் விலை கடுமையாகஉயரும். ஏற்கெனவே உயர்ந்திருக்கும் விலையால், மத்திய அரசுக்கு மானியம் தரவேண்டிய செலவு அதிகரிக்கும். அப்போதுதான் விவசாயிகளுக்கு சலுகை விலையில் உரத்தை வழங்கிட முடியும். பொட்டாஷ் விலை உயரும்போது இந்தியாவில் உரத்தின் விலையும் அதிகரி்க்கும்” எனத் தெரிவித்தார்

கிரிசில் ரேட்டிங்கின் இயக்குநர் நிதின் ஜெயின் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யப் போர் உரஇறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், மத்திய அரசு உரத்தின் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளி்த்தால் விலையைக் குறைக்கலாம். யூரியா, டிஏபி, எம்ஓபி, என்பிகே ஆகிய உரங்கள் ரஷ்யாவிலிருந்துதான் அதிகமாக நமக்கு வருகின்றன.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடை இந்த இறக்குமதியை கடுமையாகபாதிக்கும். பட்ஜெட்டில் உரத்துக்குஒதுக்கிய மானியமும், விலை உயர்வால் போதுமானதாக இருக்காது” எனத் தெரிவித்தார்