Russia Ukrain Crisis:22 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறை: ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாதவகையில் சரிவு
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடுப்பு, உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகள் போன்றவற்ளால் ரஷ்யாவின் ரூபிள் கரன்சி மதிப்பு டாலருக்கு எதிராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடுப்பு, உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகள் போன்றவற்ளால் ரஷ்யாவின் ரூபிள் கரன்சி மதிப்பு டாலருக்கு எதிராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த1998ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, ரஷ்யாவில் மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஏற்பட்டது, அப்போது ஏற்பட்டதுதான் ரஷ்யா பொருளாதார வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது, அதைவிட மோசமானதாக தற்போது ரூபிள் மதிப்பு சரிந்துள்ளது.
டாலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிள் கரன்சி மதிப்பு தொடர்ந்து சரி்ந்துவருவதால், மக்கள் பதற்றமடைந்து, வங்கிகளில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க கூட்டம்கூட்டமாக படையெடுக்கிறார்கள்.
இதை அறிந்த ரஷ்ய மத்திய வங்கி, மக்கள் பதற்றமடைய வேண்டாம், தேவையான அளவு, தடையில்லாத வகையில் கரன்சி வினியோகிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர் ஸ்டீவ் ஹேன்க் கூறுகையில் “ ரஷ்யாவின் ரூபிள் கரன்சி வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.117.62 ரூபிளாகச் சரிந்துள்ளது. 2022, ஜனவரி 1ம்தேதியிலிருந்து ரூபிள் மதிப்பு 47.33% டாலருக்கு எதிராகச் சரிந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்ட மோதலும் கரன்சி சரிவுக்கு முக்கியக்காரணம். ரஷ்யாவில் ஆண்டு பணவீக்கம் 69.4% இருக்கும் என கணக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
ரூபிள் மதிப்பு சரிந்தால் என்ன அர்த்தம்
- ரஷ்யாவில் மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கையின் தரம் குறையும்
- இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கும், சப்ளையிலும் தட்டுப்பாடு ஏற்படும்
- கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் 40 சதவீதம் கூடுதலாக ரூபிள் பெறுகிறது
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தீவிரமாக்கியதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்ததையடுத்து, ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சர்ரென சரிந்தது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயான் கூறுகையில் “உக்ரைனை சிதைக்கும் நோக்கில் செயல்படும் ரஷ்யா, தனது சொந்த நாட்டின் எதிர்காலத்தையே அழித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள தடையால், ஸ்விப்ட் வங்கிமுறையிலிருந்து ரஷ்யா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்விப்ட்(SWIFT) பேமெண்ட் முறையை ரஷ்யா வெளிநாடுகளுடன் பயன்படுத்த முடியாது. ரஷ்யா ஏற்றுமதி இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்படும்” எனத் தெரிவித்தார்