Asianet News TamilAsianet News Tamil

share market today: படிச்சிட்டு முதலீடு செய்யுங்க! அடுத்தவாரம் பங்குச்சந்தையை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

share market today: ரஷ்யா உக்ரைன் போர், அமெரி்க்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் என்ற அச்சம், இந்தியாவில் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் வெளியீடு ஆகியவைதான் அடுத்தவாரம்பங்குசந்தையை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாகும்.

Russia Ukraine war, Fed rate decision crucial factors for markets: Analysts
Author
Mumbai, First Published Mar 13, 2022, 1:57 PM IST

ரஷ்யா உக்ரைன் போர், அமெரி்க்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் என்ற அச்சம், இந்தியாவில் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் வெளியீடு ஆகியவைதான் அடுத்தவாரம்பங்குசந்தையை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாகும்.

வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை என்பதால், அன்றைய தினம் பங்குச்சந்தைக்கு விடுமுறைநாள். ஆதலால், 4 நாட்கள் மட்டுமே சந்தை இயங்கும்.

Russia Ukraine war, Fed rate decision crucial factors for markets: Analysts

காரணிகள் 

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் முடியும்வரை பங்குச்சந்தையில் ஊசலாட்டம் தொடர்ந்து வரும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஸ்வஸ்திகா முதலீட்டு நிறுவனத்தின் சந்தைஆய்வாளர் சந்தோஷ் மீனா கூறுகையில் “அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்து அடுத்தவாரம் ஆலோசனை நடத்தஇருக்கிறது. அமெரிக்காவில் பணவீ்க்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துவிட்டது. வட்டி உயர்வில் என்ன முடிவெடிக்கப்படும் என்பதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். வட்டிவீதத்தில் முடிவு எடுக்கப்படாதவரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யமாட்டார்கள். உள்நாட்டில் சில்லரவை பணவீக்க விவரம்  அடுத்த வாரம் வெளியாகிறது இவையெல்லாம்தான் பங்குச்சந்தையை தீர்மானிக்கும் காரணிகள்.

Russia Ukraine war, Fed rate decision crucial factors for markets: Analysts

கச்சா எண்ணெய் விலை

இது தவிர கச்சா எண்ணெய் விலை, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் செயல்பாடு ஆகியவை பங்குச்சந்தையில் வர்த்தகத்தை தூண்டிவிடும் முக்கியக் காரணிகள். உள்நாட்டுப் பணவீக்க விவரங்கள் நாளை மாலை வெளியாகிறது. பணவீக்கம் அதிகரித்தால்,ரிசர்வ்வங்கி வட்டியை உயர்த்தும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களை யோசிக்க வைக்கும்” எனத் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,216 புள்ளிகள் உயர்ந்தது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 385 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

Russia Ukraine war, Fed rate decision crucial factors for markets: Analysts

பணவீககம் விவரங்கள்

மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் சித்தார்த் கெம்கா கூறுகையில் “ தேர்தல் முடிந்துவிட்டது, அடுத்ததாக ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம், பணவீக்கம் அதிகரி்த்தால் ரிசர்வ் வங்கி என்ன முடிவு எடுக்கும் ஆகியவை அடுத்தவாரத்தில் இந்தியப் பங்குச்சந்தையைின் ஓட்டத்தை தீர்மானிக்கும் காரணிகள். இதைத் தெரிந்துதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்.

Russia Ukraine war, Fed rate decision crucial factors for markets: Analysts

ஏற்ற இறக்கம் தொடரும்

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வரை தொடர்ந்துசந்தையில் ஊசலாட்டம், ஏற்ற இறக்கம் இருக்கத்தான்செய்யும். இது தவிர பிரன்ட்கச்சா எண்ணெய்விலை,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு , பணத்தை எடுத்தல் ஆகியவையும் முக்கியமானது ” எனத் தெரிவித்தார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios