500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. குறைந்த மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே புதிய ஏடிஎம் அறிவுறுத்தல்கள் எனவும், 500 ரூபாய் நோட்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 500 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டை விரைவில் மத்திய அரசு திரும்ப பெற உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.புதிய ஏடிஎம் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்களுக்கு முடிவுகாண ஆர்பிஐ துல்லியமாக விளக்கம் அளித்துள்ளது.பொதுமக்களிடம் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளுக்கான பஞ்சம் அதிகமாக இருப்பதால், ₹100 மற்றும் ₹200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே ஆர்பிஐ புதிய அறிவுறுத்தல்களை தந்தது.
இதன்படி, ஏடிஎம்களில் ₹100 மற்றும் ₹200 மதிப்புள்ள நோட்டுகள் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. பல ஏடிஎம்களில் ₹500 நோட்டுகளை மட்டுமே வெளியிட்டு, மக்கள் சில்லறை பெற முடியாமல் அவதிப்பட்டனர். ரிசர்வ் வங்கி இதை உணர்ந்து, செப்டம்பர் 30க்குள், நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் குறைந்தது 75% இடங்களில் ₹100 மற்றும் ₹200 நோட்டுகள் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.இதன் நோக்கம்… மக்கள் சிரமமின்றி பரிவர்த்தனைகளை செய்யவும், சில்லறை நாணயங்களின் பற்றாக்குறை குறையவும் செய்வதுதான்.
சமீபத்தில் கருத்தரங்கில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்என்றும் ₹2000 நோட்டுகள் முற்றிலும் வட்டாரத்தில் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் “0.02% மட்டுமே மக்கள் வசம் இருக்கக்கூடும்; மீதியெல்லாம் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்தார்.
டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் பலரும் ஷாக்காகி உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய விளக்கம் அளித்துள்ளது. அதில் 500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் இன்னும் சட்டப்பூர்வமானதாக இருக்கிறது என்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்குகவும் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து 500 ரூபாய் நோட்டு நடைமுறையில் இருக்கும் எனவும் அதனை நம் நாடு முழுவதும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
