ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளதால், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு EMI குறையும். 50 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் ரூ.3100 வரை EMI குறையும், மொத்த வட்டி சேமிப்பு ரூ.7.5 லட்சம் வரை இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கருணையால் வீட்டு கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளதால் கடன் வாங்கி வீடு கட்டியுள்ள நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கின்றனர். சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்த நிலையில் அதனால் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். மேலும் வீடு வாங்கி நினைக்கும் பலருக்கும் இது புதிய கதவை திறந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அது என்னவாம் repo விகிதம்?

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் வாங்கும் போது செலுத்தும் வட்டி இது. இதுவே வாடிக்கையாளர்களுக்கான கடன்களின் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கிறது. இதனால், வீட்டு கடன்களின் வட்டி விகிதம் குறைந்து கடன் பெற்றோர் மனநிலையை சந்தோஷமாக்கியது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்ததால் இந்த ஆண்டின் முத்த குறைப்பு 1 சதவீதமாக அதிகரித்தது.

வட்டி குறைப்பு உங்கள் வீட்டுக் கடனில் என்ன மாற்றத்தை தரும்?

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு வீட்டுக்கடன் வாங்கியவர்களின் மாத சம்பளத்தை மிச்சப்படுத்தும். 50 லட்சம் கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ ரூ.3100 வரை குறையும். மொத்த வட்டி சேமிப்பு ரூ.7.5 லட்சம் வரை இருக்கும். அல்லது, EMIயை மாறாமலே வைத்து 3 வருடங்கள் முன் கடனை முடிக்கலாம்.இதனால், மொத்தமாக ரூ.15.4 லட்சம் வரை வட்டி சேமிக்கலாம்

₹50 லட்சம் வீட்டு கடன்

மாதம் ₹3,100 வரை குறைந்த EMI

மொத்த வட்டி சேமிப்பு: ரூ.7.5 லட்சம் வரை அல்லது,

EMIயை மாறாமலே வைத்து 3 வருடங்கள் முன் கடனை முடிக்கலாம்

இதனால், மொத்தம் ரூ.15.4 லட்சம் வரை வட்டி சேமிக்கலாம்

யாருக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பு?

புதிதாக வாழ்க்கையை தொடங்கும் இளைய தம்பதிகளுக்கும் “சிறிது வட்டி குறையட்டும், பிறகு வீடு வாங்கலாம்” என யோசித்து காத்திருந்தவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பு என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் தற்போதைய வங்கியுடன் தொடர்பு கொள்ளுங்கள். குறைந்த வட்டியில் வீட்டு கடன் வழங்கும் புதிய வங்கிகளை ஆராயுங்கள். உங்கள் EMI ஐ மறுகணக்கீடு செய்து, பணசுமையை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய வீடு வாங்கும் திட்டத்திற்கு இன்று முதல் திட்டமிடுங்கள்.

வீடு வாங்க சரியான நேரம்

இந்த சிறிய மாற்றம்,ஆனால் வாழ்நாளில் பெரிய மாறுதல் அளிக்கும் என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு மாதமும் ₹3,000 சேமித்தால், அது உங்கள் வாழ்க்கையை மாற்றும். இன்றைய முடிவு, உங்கள் எதிர்கால நிம்மதிக்கான அடித்தளம் ஆகலாம்.இனி சொந்த வீடு கனவாக இல்லை. அது நிஜமாகும் பாதையின் முதல் படி.வட்டி விகிதம் குறைந்திருக்கிறது – இதுவே சரியான நேரம்.