லண்டனில் உள்ள பிரிட்டன் நாட்டு மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் வளர்ச்சி விருது இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரவாஹ் மற்றும் சர்தி ஆகிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கியதற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) லண்டனின் மத்திய வங்கியால் வழங்கப்படும் 2025ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் வளர்ச்சி விருதைப் பெற்றுள்ளது. பிரவாஹ் மற்றும் சர்தி ஆகிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கியதற்காக ஆர்பிஐ இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பிரவாஹ் மற்றும் சர்தி அமைப்புகள் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் ரிசர்வ் வங்கியின் உள் மற்றும் வெளிப்புற செயல்முறைகளை நெறிப்படுத்தியுள்ளன. செயல்பாடுகளை நவீனமயமாக்குவதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் இந்த அமைப்புகளின் பங்கை விருதுக் குழு பாராட்டியுள்ளது.
"ரிசர்வ் வங்கியின் புதுமையான டிஜிட்டல் முயற்சிகளுக்காக லண்டனில் உள்ள பிரிட்டனின் மத்திய வங்கி 2025ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் வளர்ச்சி விருதை வழங்கி கௌரவித்துள்ளது" என இந்திய ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
காகித அடிப்படையிலான சமர்ப்பிப்புகளைக் குறைத்து, உள் மற்றும் வெளிப்புற செயல்முறைகளை நவீனமயமாக்குவதன் மூலம் செயல்திறனை கணிசமாக மேம்படுத்திய ரிசர்வ் வங்கியின் பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்புகளின் பயன்பாட்டை இவ்விருது அங்கீகரிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்திற்கான ரிசர்வ் வங்கியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, மத்திய வங்கிக்குள் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக இந்த முயற்சிகளை விருதுக்குழு பாராட்டியிருக்கிறது.
