rbi : rupee hits all time low :டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77க்கும் அதிகமாகச் சரிந்த நிலையில் நேற்று சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலர்களை தேவைக்கு ஏற்றார்போல் விற்பனை செய்ததால்தான் ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் காப்பாற்றப்பட்டது.
டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77க்கும் அதிகமாகச் சரிந்த நிலையில் நேற்று சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலர்களை தேவைக்கு ஏற்றார்போல் விற்பனை செய்ததால்தான் ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் காப்பாற்றப்பட்டது.
இதனால் நேற்று டாலருக்குஎதிராக ரூபாய் மதிப்பு ரூ.77.50 என்ற அளவிலேயே சரியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஒருவேளை நேற்றும் ரிசர்வ் வங்கி தலையிடாமல் இருந்திருந்தால், ரூபாயின் மதிப்பு மோசமாகச் சரிந்திருக்கும்.

வரலாற்றுச் சரிவு
திங்கள்கிழமையன்று டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.77.29ஆகத் தொடங்கி, ரூ.77.46க்கு சரிந்தது. அந்நிய முதலீட்டாலர்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெறுவதாலும், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரிப்பாலும், டாலருக்கான தேவை சந்தையில் அதிகரித்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.77.46க்கு சரிந்தது.
ரிசர்வ் வங்கி உடனடியாகத் தலையிட்டு, தன்னிடம் இருக்கும் டாலர்களை வங்கிகள் மூலம் விற்பனை செய்து சரிவிலிருந்து இந்திய ரூபாய் சரிவைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தலையிடவில்லை. இருப்பினும் அன்று மாலை 14 காசுகள் உயர்ந்து ரூபாய் மதிப்பு ரூ.77.33 என முடிந்தது
![]()
ரிசர்வ் வங்கி தலையீடு
இந்நிலையில் நேற்றும் ரூபாய் மதிப்பு மளமளவெனச் சரியத் தொடங்கியது. இதையடுத்து செலாவணிச் சந்தையில் ரிசர்வ் வங்கி தலையி்ட்டு வங்கிகள் மூலம் டாலர்களை வினியோகம் செய்தது. இதையடுத்து, ரூபாய் மதிப்பு ரூ.77.50 என்ற அளவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கும் வகையில் நேற்று ஒரே நாளில், ரிசர்வ் வங்கி வங்கிகள் மூலம் 50 கோடி முதல் 70 கோடி வரையிலான டாலர்களை விற்பனை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆனால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத்ததை உயர்த்துவது, இந்தியாவில் அதிகரி்க்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை அடுத்தடுத்து உயர்த்துவது ஆகியவற்றால் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இந்த மாத இறுதிக்குள் ரூ.78ஆகவும், ஜூன் மாத இறுதிக்குள் ரூ.80ஆகவும் வீழ்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கையிருப்பு கரைகிறது
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2021ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி நிலவரப்படி மத்திய அரசிடம் இதுவரை இல்லாத வகையில் 64200 கோடி டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது. ஆனால், தற்போது அது 4500 கோடி குறைந்திருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு 59,800 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
