rbi : repo rate :ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளதால், வீடு, வாகனக் கடன் வாங்கியோருப்போர், மாத இஎம்ஐ செலுத்துவோர் அதிகமான வட்டியும், இஎம்ஐ செலுத்த வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலிருநது தப்பித்து குறைவாக வட்டி செலுத்தவும், இஎம்ஐ செலுத்தவம் 5 அருமையான டிப்ஸ் வழஙக்ப்பட்டுள்ளது.
rbi : repo rate :ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளதால், வீடு, வாகனக் கடன் வாங்கியோருப்போர், மாத இஎம்ஐ செலுத்துவோர் அதிகமான வட்டியும், இஎம்ஐ செலுத்த வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலிருநது தப்பித்து குறைவாக வட்டி செலுத்தவும், இஎம்ஐ செலுத்தவம் 5 அருமையான டிப்ஸ் வழஙக்ப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ்வங்கி. இந்த மாதத்தில் 50 புள்ளிகள் என மொத்தம் 90 புள்ளிகள் அதிகரித்துள்ளன. இதனால் வட்டிவீதம் ஒரு மாதத்துக்குள் 90 புள்ளிகள் உயர்ந்து 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ரெப்போ ரேட் வீதம் அதிகரிப்பு என்பது வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கானவட்டியாகும். வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தும் போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியையும் உயர்த்தும்.
இதனால் அடுத்துவரும் நாட்களில் வங்கிகள் அனைத்தும் தங்களின் இஎம்ஐ கட்டணத்தை உயர்த்தும், மே மாதம் ஏற்கெனவே பல்வேறு வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்திவிட்ட நிலையில், அடுத்ததாக, மீண்டும் வட்டியை உயர்த்த உள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் வீட்டுக்கடன் வாங்கியிருப்போரும் அதிகமான வட்டியும், நீண்ட இஎம்ஐ செலுத்த வேண்டியது வரும். இதிலிருந்து தப்பிக்க எளிய 5 வழிமுறைகள் உள்ளன.

குறைந்த வட்டி விதிக்கும் வங்கியைத் தேடுங்கள்
வீடுகட்ட கடன் வாங்கியிருக்கும் வங்கியில் ரெப்போ ரேட் உயர்வால் அதிகமான வட்டி விதிக்கப்பட்டல், குறைவான வட்டிவிதிக்கும் வங்கியை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு அந்த வங்கியைக் கண்டறிந்தால், ஏற்கெனவே கடன் வாங்கியிருக்கும் வங்கியிலிருந்து கடனை அந்த வங்கிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றும்போது வங்கிகள் அபராதம் ஏதும் விதிப்பதில்லை.

கடன் செலுத்தும் காலத்தை நீட்டித்தல்
குறைந்த இஎம்ஐ செலுத்துவதற்காக நீண்டகாலத்துக்கு செலுத்தும் வகையில் கடனை மாற்றி அமைக்கலாம். ஊதியம் குறைவு, அதிக இஎம்ஐ கட்டுவதால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது என்றால், வங்கி மேலாளரிடம் பேசி கடன் செலுத்தும் அளவை நீடிக்கலாம். பெரும்பாலான வங்கிகள் கடன் பெற்றவரின் 60வயதுவரை கடன் செலுத்தும் காலத்தை நீட்டிப்பார்கள்

பாதிக் கடனை செலுத்துதல்
அதிகமான இஎம்ஐ, வட்டி ஆகிவற்றிலிருந்து தப்பிக்க மற்றொருவர் வீட்டுக்கடனில் பாதியை மொத்தமாக அடைத்துவிடுவதாகும். இதன் மூலம் இஎம்ஐ செலுத்துவது குறையும், செலுத்த வேண்டிய முதலீட்டுதொகையும் குறையும்.

குறைந்த லாபம் தரும் முதலீடுகளை நிறுத்துங்கள்
குறைவான லாபம் தரும் முதலீடு செய்திருந்தால், இப்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு அவற்றிலிருந்து வெளியேறலாம். வீட்டுக்கடன் வட்டி செலுத்துவதைவிட முதலீட்டிலிருந்து வருமானம் குறைவாகக் கிடைத்தால் அந்த முதலீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறலாம். இந்த முதலீட்டிலிருந்து கிடைக்கும் தொகையை வீட்டுக்கடனில் ஒருபகுதியை செலுத்தி, வட்டியைக் குறைக்க முடியும்

புதிய கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு சிந்தியுங்கள்
வட்டிவீதம் கடுமையாக உயர்ந்திருப்பதால், புதிய கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கடன் வாங்கலாம். வட்டிவீதம் உயரும்போது, புதிய கடனுக்கு அதிகமான வட்டி செலுத்த வேண்டியது வரும், ஏற்கெனவே இருக்கும் கடனுக்கான வட்டியும் உயரும். ஆதலால், முதலில் ஏற்கெனவே இருக்கும் கடனை செலுத்துவது சிறந்தது.
