rbi policy :இ-பேமென்ட்டில்கட்டணம் செலுத்தும் அளவை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக அதிகரித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
rbi policy :இ-பேமென்ட்டில்கட்டணம் செலுத்தும் அளவை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக அதிகரித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அதில் முக்கியமாக “ கடனுக்கான வட்டிவீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டநிலையில் இந்த முறை 50 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடனுக்கான வட்டி வீதம் 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதிகளை வழங்கும் நோக்கில், இ-பேமெண்ட் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15 ஆயிரம் வரை வாடிக்கையாளர்கள் கட்டண் செலுத்தும்போது ஓடிபி(OTP) எண் பெறத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
. காப்பீடு ப்ரீமியம், கல்விக்கட்டணம், சந்தாசெலுத்துதல் போன்றவற்றுக்கு இ-பேமெண்ட் மூலம் கட்டணம் செலுத்தும் அளவை அதிகப்படுத்த வசதி செய்ய வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இ-பேமெண்ட்டில் ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த ஓடிபி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இனிமேல் மக்களிடம் டிஜிட்டல் பேமெண்ட் முறை அதிக ஊடுருவும், புழக்கத்துக்குவரும் என்று நம்புவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் யுபிஐ முறையில் டெபிட் கார்டுகளை மட்டுமே இணைத்து பணம் செலுத்தும் முறை தற்போது அமலில் இருந்து வருகிறது. இனிமேல், கிரெடிட் கார்டையும் இணைத்து பணம் செலுத்தும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவில் மட்டும் யுபிஐ சேவையை பயன்படுத்துவோர் 26 கோடி பேர் உள்ளனர். இதில் 5 கோடிபேர் வணிகர்கள். சமீபகாலமாக யுபிஐ வளர்ச்சி அதிகரித்திப்பதால் இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
முதல்கட்டமாக ரூபே கிரெடிட் கார்டுகளை யுபிஐ மூலம் இணைத்து அதன்பின், விசா, மாஸ்டர் கார்டுகள் யுபிஐ மூலம் இணைக்கும் வசதி கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
