RBI monetary policy committee meet 2023-24: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசரவ் வங்கி அறிவிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் 6.50 சதவீதமாகத் தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் 6.50 சதவீதமாகத் தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமானது.
கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6 முறை அதிகரிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை 250 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தி வந்ததால், கடந்த ஜனவரியில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவீதம் வரம்பையும் மிஞ்சியது.
Gold Rate Today: மக்களே முந்துங்கள்... தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. சரசரவென குறைந்தது...
தற்போது ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடர்கிறது. இது பிப்ரவரி 2019 க்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மேலும் 25 புள்ளிகள் உயர்த்தும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெப்போ வட்டியில் உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுருப்பது வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு ஆசுவாசம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த (ஏப்ரல்) கூட்டத்திற்கு மட்டுமே வட்டி விகிதத்தை மாற்றமின்றி இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதிக்கொள்கை குழு எதிர்காலத்தில் தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயங்காது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறினார்.
போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்த அம்பானி! எவ்வளவு அடி வாங்கினாலும் அசராத அதானி!