rbi mpc meeting :ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் இன்று நிறைவுடையும் நிலையில், கடனுக்கான வட்டிவீதம் 50 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், வட்டிவீதம் மட்டும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திவிடுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் இன்று நிறைவுடையும் நிலையில், கடனுக்கான வட்டிவீதம் 50 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், வட்டிவீதம் மட்டும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திவிடுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
பணவீக்கம்
நாட்டின் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்திருந்தது. ஆனால், 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம்வரை பணவீக்கம் 6 சதவீதத்தைக் கடந்தது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து, அவசரமாக முடிவு எடுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியது, ரொக்கக் கையிருப்பு வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது.

வட்டிவீதம் உயரலாம்
இதனால் கடனுக்கான வட்டிவீதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் வட்டி வீதம் உயர்ந்தும் எதிர்பார்த்த பலன் இல்லை. இதனால் இன்று நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி வீதம் 50 புள்ளிகள்வரை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைவிட, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே அதிகமான முக்கியத்துவத்தை ரிசர்வ் வங்கி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால்,ரெப்போ ரேட் உயர்வால் மட்டும் பணவீக்கம் கட்டுப்படுமா. எப்படி இது வேலை செய்யும். அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால், பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை என்பது, சப்ளை மற்றும் தேவையின் அடிப்படையில் நி்ணயிக்கப்படுகிறது. இதில் விலைவாசி உயர்வு அல்லது குறைவு என்பது தேவை அல்லது சப்ளை பக்கம் ஏற்படும் குறைவு, அதிகரிப்பால் ஏற்படுகிறது.

யாருக்கு லாபம்
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்குழுவில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வட்டிவீதம் உயர்த்தப்படும்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தில் அளவு குறையும். வட்டிவீதம் உயரும்போது, வங்கிகளில் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரிக்கும், கடன் வாங்கியிருந்தாலும் இஎம்ஐ, வட்டி அதிகரிக்கும். ஆக, வட்டிவீதம் உயர்த்தப்படும்போது டெபாசிட்தாரர்களுக்கும் பயன்படும்.
சிஆர்ஆர்
ரிசர்வ் வங்கிக்கு ரெப்போ ரேட் உயர்வைத் தவிர வேறு சில கருவிகளும் பணவீக்கத்தைக்க ட்டுப்படுத்த உள்ளன. அதில் முக்கியமானது ரொக்கக் கையிருப்பு வீதம். இது வங்கிகள் தங்களுக்கான ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும். இந்த டெபாசிட் அளவை உயர்த்துவது குறைப்பதன் மூலமும் சமூகத்தில் புழக்கத்தில் உள்ள பணம் குறைக்கலாம், அதிகப்படுத்தலாம்.

அதனால்தான் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 40 புள்ளிகளும், சிஆர்ஆர் எனப்படும் ரொக்கக் கையிருப்புவீதத்தை 50 புள்ளிகளும் உயர்த்தியது. ஆதலால், இரு கருவிகளும் சரியாகப் பயன்படுத்தும்போது பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
செயற்கை தடைகள்
ஆனால் சில நிபந்தனைகள் உள்ளன. பணவீக்கம் என்பது பணத்தின் சப்ளையால் மட்டும் பாதிக்கப்படக்கூடாது. தற்போதிருக்கும் உயர்ந்த பணவீக்கம் என்பது, ரஷ்யா உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உரங்கள்விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. உக்ரைனில் நிலவும் சூழலால் சூரியகாந்தி சமையல்எண்ணெய் வரத்தும் தடைபட்டுள்ளது.
இந்த காரணிகள் தவிர்த்து பருவகாலத்தில் நிலவும்காரணிகளும் பணவீக்கத்தை உயர்த்தும். குறிப்பாக எலுமிச்சை, தக்காளி, கோதுமை விலை அதிகரிப்பு. பருவகாலத்தால் ஏற்படும் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கியின் பணவியல் கருவிகள் மூலம் கட்டுப்படுத்த, தடுக்க முடியாது.

பாதிப்பை குறைக்கும்
இருப்பினும், பொருளாதாரத்தில் தேவையின் சில மறுமலர்ச்சியின் காரணமாகவும், பணவீக்கத்தின் ஒரு பகுதியானது படிப்படியாக மீண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை,கருவிகளை பயன்படுத்தும்போது அதாவது வட்டிவீதம் உயர்வு போன்றவற்றால் இந்த தேவையை குறைக்கிறது, இது பொருளாதார வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும்.

அதேசமயம், ரிசர்வ் வங்கியின் பணவியல் கருவிகள் பணவீக்கம் பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் அதாவது உணவுப் பொருட்கள் விலை முதல் ஊதிய உயர்வு, வீட்டுவாடகை, உள்ளிட்ட இதர பிரிவுகளில் விலைவாசி உயர்வு உயர்வதைத் தடுக்கும் பொருளாதாரத்தில் பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது.