RBI : inflation in india :நாட்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுஅளவைவிட அதிகரித்து கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு உயரும் என்று ராய்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுஅளவைவிட அதிகரித்து கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு உயரும் என்று ராய்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு,உணவுப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வுதான் பணவீக்கத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது.இதன் மூலம் தொடர்ந்து 4-வது மாதாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறி பணவீக்கம் உயரும்.

ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 6சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்துள்ளது. ஆனால், கடந்த 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 6 சதவீதத்துக்கும் மேல் பணவீக்கம் அதிகரித்தது. இதில்மார்ச் மாதம் ஏறக்குறைய 7 சதவீதத்தை எட்டிவிட்டது. இதையடுத்துதான், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தியது.
மீறும் பணவீக்கம்
இந்நிலையில் ஏப்ரல் மாத பணவீக்கமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறி 7 சதவீதத்துக்கு மேல் அதிகரி்க்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.ரஷ்யா உக்ரைன் இடையிலான போரால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, அதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது, உணவுப்பொருட்கள் விலைஉயர்ந்தது ஆகியவைதான் பணவீக்கம் அதிகரிக்க முக்கியக் காரணம்.
7% மேல்உயரலாம்
ராய்டர்ஸ் நிறுவனம் 45 பொருளாதார நிபுணர்களிடையே கடந்த 5 ம்தேதி முதல் 9ம் தேதிவரை நடத்திய கருத்துக்கணிப்பில் ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7.50 சதவீதமாக அதிகரிக்கும் அல்லது 7 சதவீதம்ம முதல் 7.80 சதவீதத்துக்குள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மார்ச் மாதத்தில் பணவீக்கம் 6.95 % இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப்பின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்கு மேல் அதிகரிக்க இருக்கிறது.
பார்க்லே நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமைப் பொருளாதார வல்லுநர் ராகுல் பஜோரியா கூறுகையில் “ நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறிச் சென்றதால்தான் வட்டி வீதம் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது.
மொத்தவிலை பணவீக்கம்
ஏப்ரல் மாதத்தில் சில்லரைப் பணவீக்கமும் 7 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கலாம், மொத்தவிலைப் பணவீக்கமும் இரட்டை இலக்கத்தில் உயரலாம். அதாவது 14 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கலாம். தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே மொத்தவிலைப் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சில்லரைப் பணவீக்கம் 7 சதவீதத்துக்கு மேல் உயரும்பட்சத்தில், நிதிக்கொள்கைக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மேலும் வட்டிவீதத்தை உயர்த்தவாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்தார்
