பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த ஒருநாள் ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த ஒருநாள் ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போதும், ஒரு மாவட்டத்திலிரந்துமற்றொரு மாவட்டத்துக்கு வேலைக்குச் செல்லும்போது அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் ஒரு ரேஷன்கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமின்றி, யாரும் எந்த மாநிலத்துக்குச் சென்று ரேஷன் கார்டுமூலம் தேசியஉணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பெற முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்தபோதிலும் உணவுக்காக காத்திருக்க வேண்டிய நிலையில்லாமல் இருக்கிறார்கள். மத்திய அரசு ,மாநில அரசுகள் மூலம் மானியவிலையில்கிடைக்கும் உணவுப் பொருட்கள், தானியங்களை எந்தவிதமான சிரமமின்றிப்பெற முடிகிறது
இது குறித்து உணவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் “ 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு மாதத்தில் 2.5 கோடி ரேஷன் கார்டுகள் ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை ஒருநாடு ஒருரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் 56 கோடி பிரமாற்றங்கள் நடந்துள்ளன. ஒரு கோடி டன் உணவுப்பொருட்கள் புலம்பெயர் தொழிலாளர்ளுக்கு வழங்கப்பட்டு, ரூ.31 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினாலும், அவர்களால் தங்களுக்குரிய மீதமுள்ள ரேஷன் பொருட்களை தடையின்றி பெற முடியும். ரேஷன் கார்டுகளை மாற்றும்திட்டம் மூலம் 24 கோடி ரேஷன் கார்டுகள் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 96 சதவீத ரேஷன் கடைகளில் இ-பிஓஎஸ் எந்திரங்கள் இருப்பதால், ஆதார் கார்டு அல்லது ரேஷன் அட்டை மூலம் எளிதாகப் பொருட்களைப் பெற முடியும். பயோ-மெட்ரிக் முறைப்படி தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் 90 சதவீதம் பயனாளிகள் மாதந்தோறும் உணவுப்பொருட்களைப் பெற்று வருகிறார்கள்.
தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில்தான் ஒருநாள் ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் எந்தப்பகுதிக்குச் சென்றாலும் உணவுப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொருட்களை பெற முடியும். ஒவ்வொரு சீசனுக்கும் 5 முதல் 6 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இடம் பெயர்கிறாரக்ள். இதில் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்துக்குள்ள, ஒருமாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்துக்கு செல்கிறார்கள்.

அவர்களுக்கு எளிதாக உணவுப்பொருட்கள் ரேஷன் கடையில் கிடைக்க ஒருநாடு ஒருரேஷன்கார்டு திட்டம் உதவுகிறது. தற்போது ஒருநாடு ஒருரேஷன் கார்டு திட்டம் மூலம் 77 கோடி பேர் பயன் அடைந்து வருகிறார்கள், இதில் 81 கோடி பேர் தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பயன் அடைகிறார்கள். இதில் அசாம் மட்டும்தான் இன்னும் ஒருநாடுஒருரேஷன் கார்டு திட்டத்தில் சேரவில்லை. ரேஷன் கார்டு மூலம் ஆதார் இணைக்கப்பட்டதையடுத்து, கடந்த 2013 முதல் 2021ம் ஆண்டுவரை 4.74 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்
