பாதியில் நின்ற கல்லூரி படிப்பு.. ஆனாலும் சோர்ந்துவிடவில்லை! - மாதம் 45 லட்சம் சம்பாதிக்கும் சூப்பர் Chef!
சிறுவயதிலேயே சமையலில் தனி ஆர்வம் கொண்டிருந்தார் ரன்வீர், அவர் அடிக்கடி தனது தாய்க்கு சமையலறையில் உதவுவதன் மூலம் தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்பதை உணர்ந்துள்ளார்.

ஒருவரிடம் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், சம்பாதிப்பது என்பது ஒரு கடினமான விஷயமே அல்ல. தெளிவான குறிக்கோளுடன் முன்னேறினால், புகழும் பணமும் தானாக வரும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் ரன்வீர் பிரார். ஒரு காலத்தில் வேலை தேடி அலைந்த பிரார், இப்போது பல லட்சங்களில் சம்பாதிக்கும் இந்தியாவின் டாப் செஃப்களில் ஒருவர்.
இந்தியாவின் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர் தான் ரன்வீர் பிரார். இவர் ஒரு சமையல் சக்ரவர்த்தி, உணவக உரிமையாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம். ரன்வீர் பிராரின் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது, அவரது சாதனைகள் பற்றிய சில தகவல்கள் பின்வருமாறு..
ரன்வீர் பிரார் லக்னோவைச் சேர்ந்தவர், பிப்ரவரி 8, 1978 அன்று ஒரு உணவக உரிமையாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே சமையலில் தனி ஆர்வம் கொண்டிருந்தார் ரன்வீர், அவர் அடிக்கடி தனது தாய்க்கு சமையலறையில் உதவுவதன் மூலம் தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்பதை உணர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : இதுதான் உலகின் விலையுயர்ந்த தக்காளி விதை .. ஒரு கிலோ ரூ.3 கோடியாம்!
உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்ந்த ரன்வீர் பிரார், சில மாதங்களிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதன் பிறகு சமையலை தனது முழு நேர தொழிலாக மேற்கொள்ளும் நோக்கத்துடன் அவர் மும்பைக்கு பயணமானார்.
ஒரு நல்ல நிறுவனத்தில் சமையல்காரராக வேலை கிடைக்கும் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வித்தியாசமான பல வேலைகளை செய்துள்ளார் ரன்வீர். ஆனால் அது எதிலும் அவருக்கு பெரிய நாட்டமில்லை, இறுதியாக அவருடைய முயற்சிக்கு பலன் கிடைத்தது. தாஜ்மஹால் பேலஸ் என்ற இடத்தில் அவருக்கு சமையல்காரராக வேலை கிடைத்தது.
ப்ரார் தான் அங்கு தலைமைச் சமையல்காரராகப் பணிபுரிந்தார், அதன் பிறகு தான் Master Chef India நிகழ்ச்சியில் பங்கேற்றார், அதன் மூலம் ரன்வீர் பிரார் பெயர் மிகவும் பிரபலமானது. தற்போது டெல்லி, கோவா மற்றும் மும்பை நகரங்களில் இவரது உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள பணக்கார Chefகளில் இவரும் ஒருவர்.
ரன்வீர் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி, அவருடைய மாத வருமானம் மட்டும் சுமார் 45 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர, ரன்வீர் பிரார் தனக்கென ஒரு வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார். அங்கு பலவிதமான உணவு வகைகளை நம்மால் பார்க்கமுடியும். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் ரன்வீர் ப்ரார், அதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
உழைத்தால் உயர்வு நிச்சயம்.. ஆனால் கொஞ்சம் காலம் எடுக்கும்.. அவ்வளவுதான்!
இதையும் படியுங்கள் : அனைத்து கிளைகளிலும் மகிளா சம்மான் கணக்கு தொடங்கலாம்!