பட்ஜெட் தாக்கல் :

வரலாற்றின் முதல் முறையாக , போது பட்ஜெட்டுடன் , ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. அதே வேளையில், ரயில்வே பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய சலுகையும் அறிவிக்கப்பட வில்லை என்பது குறிபிடத்தக்கது.

ரயில்வே பட்ஜெட் :

தென்மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்படவில்லை

தமிழகத்தில் எவ்வித ரயில்களும் நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

புதிய ரயில்கள் அறிவிப்புக்கு பதிலாக சிறப்பு கட்டண ரயில்களை இயக்கி கொள்ள ரயில்வே துறை முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரிமியம் மற்றும் சுவீதா உள்ளிட்ட கூடுதல் கட்டண ரயில்களை கூட்ட நேரங்களில் அறிவிப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடும் அதிருப்தி:

இதன் காரணமாக, ரயில் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.மேலும் ரயில் கட்டணமும் எந்த நேரத்திலும் உயரலாம் என தெரிகிறது. இதன் விளைவாக தமிழக ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.