பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார் விஜய் மல்லையா என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர் மீது அமலாக்கப்பிரிவு பண மோசடி வழக்கு பதிவு செய்து, 8,041 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்றத் தடுப்பு சிறப்பு கோர்ட் மல்லையாவை தலைமறைவான குற்றவாளியாக நேற்று முன்தினம் அறிவித்தது..

மேலும், மல்லையாவுக்கு சொந்தமான 1,620 கோடி மதிப்புள்ள புதிய சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.