பர்சனல் லோன் : வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் என்ன?
கடன் வாங்குபவர்கள் தனியாக ப்ராசசிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வங்கிகள் இந்தக் கட்டணத்தைக் கழித்த பின்னரே கடன் தொகையை வழங்குவார்கள்.
தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் ஒரு சவாலானது வங்கிகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணங்கள் ஆகும். ப்ராசசிங் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபட்டிருக்கும். தனிநபர் கடன் வாங்குவதற்கு முன், வங்கிகள் வசூலிக்கும் வட்டியை ஒப்பிடுவதோடு, இதுபோன்ற கட்டணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு கடன் வாங்கும்போது மொத்தம் எவ்வளவு செலவாகும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கடன் வாங்குபவர்கள் தனியாக ப்ராசசிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வங்கிகள் இந்தக் கட்டணத்தைக் கழித்த பின்னரே கடன் தொகையை வழங்குவார்கள். எனவே, தனிநபர் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், முதலில் வட்டி மற்றும் கூடுதல் கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னணி வங்கிகள் வசூலிக்கும் ப்ராசசிங் கட்டணம்
எச்டிஎஃப்சி வங்கி:
எச்டிஎஃப்சி வங்கி தனிநபர் கடனுக்கு ரூ.6,500 மற்றும் ஜிஎஸ்டி-யை ப்ராசசிங் கட்டணமாக வசூலிக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி:
ஐசிஐசிஐ வங்கி தனிநபர் கடன்களுக்கு 2 சதவீதம் வரை ப்ராசசிங் கட்டணம் வசூலிக்கிறது. அதாவது, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கும்போது, ரூ.2,000 வரை ப்ராசசிங் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கோடக் மஹிந்திரா வங்கி:
கோடக் மஹிந்திரா வங்கி தனிநபர் கடன்களுக்கு 5 சதவீதம் வரை ப்ராசசிங் கட்டணம் வசூலிக்கிறது. அதாவது, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கும்போது, ரூ.5,000 வரை ப்ராசசிங் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ் வங்கி:
ஆக்சிஸ் வங்கியும் கடன் தொகையில் 2 சதவீதம் வரை ப்ராசசிங் கட்டணம் வசூலிக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜனவரி 31 வரை எந்தப் ப்ராசசிங் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. ஆனால், ஜனவரிக்குப் பிறகு ரூ.10,000 வரை ப்ராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்