பேமென்ட் வங்கியை தொடங்க, தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.

பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம்:

பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களை தவிர்த்து தற்போது தான், பேமென்ட் வங்கி தொடங்குவதற்காக முழுமையான அனுமதியை இந்திய தபால் துறைக்கு, ரிசர்வ் வங்கி கொடுத்துள்ளது என்பது குரிபிடதக்கது.

பேமென்ட் வங்கி:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பேமென்ட் வங்கியை செயல்படுத்தியது. இன்னும் சில மாதங்களில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்க திட்டமிட்டிருக்கிறது என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், இதற்காக 400 கோடி ரூபாய் முதலீட்டை இந்த நிறுவனம் செய்திருக்கிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.

 மற்ற நிறுவனங்கள் :

ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலை யன்ஸ், வோடபோன் ஆகிய நிறு வனங்களுக்கு தற்போது, கொள்கை அளவிலான அனுமதி கிடைத்திருக்கிறது.ஆனால் ரிசர்வ் வங்கியின் இறுதி அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதே வேளையில், தற்போது பேமென்ட் வங்கியை தொடங்க, தபால் துறைக்கு மட்டும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.